Planet Transits in 2023 July: ஜூலை மாதத்தில், 4 முக்கிய கிரகங்கள் தங்கள் ராசியை மாற்றுகின்றன. சனி இந்த மாதம் முழுவதும் வக்ர நிலையில் நீடிக்கும் என்பதோடு, சுக்கிரம், புதன், செவ்வாய் மற்றும் சூரியன் ஆகிய கிரகங்கள் பெயர்ச்சி ஆகின்றன.
கிரகங்களின் பெயர்ச்சிகள் அனைவரின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் நிலையில், ஜூலை மாத கிரக பயிற்சிகள் யாருக்கு எப்படி பட்ட பலன்களை தரப்போகிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.
ஜூலை மாதத்தின் தொடக்கத்தில் செவ்வாய் சிம்ம ராசியில் சஞ்சரிக்கிறார், அதன் பிறகு சுக்கிரன் சிம்மத்தில் சஞ்சரிக்கிறார். சுக்கிரனுக்குப் பிறகு ஜூலை 8-ம் தேதி கடக ராசியில் புதன் சஞ்சரிக்கும் நிலையில், ஜூலை 14-ம் தேதி தன் போக்கை மாற்றிக்கொண்டு அதே ராசியில் உதயமாகிறார். ஜூலை 16 அன்று, சூரியன் கடகத்தில் சஞ்சரிக்கிறார். மாத இறுதியில், சுக்கிரன் சிம்மத்தில் வக்ர நிலையை அடைகிறார், அதே நேரத்தில் சனி இந்த மாதம் முழுவதும் வக்ர நிலையில் இருப்பார். மாத இறுதியில், புதன் மீண்டும் சிம்ம ராசியில் சஞ்சரிப்பார். அத்தகைய சூழ்நிலையில், கிரகங்களின் நிலை மாறும் பலன் அனைத்து ராசிகளிலும் காணலாம். ஜூலை மாதத்தில் கிரகங்களின் பெயர்ச்சி எந்தெந்த ராசிக்காரர்களை எப்படிப் பாதிக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.
ஜூலை மாதத்தில் கிரகப் பெயர்ச்சிகளுக்கு மத்தியில், மேஷ ராசிக்காரர்கள் உறவுகளில் கவனம் செலுத்துவதற்கு சாதகமான நேரம் இது. நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட அல்லது புதிய நபர்களை சந்திக்க இது ஒரு சிறந்த நேரம். உங்கள் தொழிலில், வேலையில் சிறிது பாதிப்பை உணரலாம். எனினும், இந்த மாதம் புதிய வாய்ப்புகளைத் தேட சரியான நேரம். பொருளாதார ரீதியாக நீங்கள் வழக்கத்தை விட அதிக எச்சரிக்கையுடன் இருப்பீர்கள். உடற்பயிற்சியைத் தொடங்க அல்லது உங்கள் உணவில் புதிய மாற்றங்களைச் செய்ய இது ஒரு நல்ல நேரம்.
ரிஷப ராசிக்காரர்கள் இந்த மாதம் தங்கள் வாழ்க்கையில் தேக்க நிலையை உணரலாம். உற்சாகமாக இருக்க நிறைய போராட வேண்டி இருக்கலாம். பணியிடத்தில் நீங்கள் சற்று வேலை பளு அதிகமாவதை உணரலாம். நீங்கள் செய்ய நிறைய வேலைகள் இருக்கும், ஆனால் அதை சரியான நேரத்தில் முடிப்பதில் டென்ஷனாக இருக்கலாம். இது உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்காமல் பார்த்துக் கொள்ளம். ஒரு நேரத்தில் ஒரு பணியில் கவனம் செலுத்துங்கள். இந்த மாதம் உங்கள் உடல்நிலை மோசமாக வாய்ப்பு உள்ளது. அதிக சோர்வையும் உணரலாம்.
மிதுன ராசிக்காரர்கள் இந்த மாதம் தங்கள் வாழ்க்கையில் மாற்றங்களைச் செய்ய ஆர்வமாக இருப்பார்கள். ஆனால் எங்கு தொடங்குவது என்பதில் குழப்பம் இருக்கும். பணியிடத்தில் நீங்கள் நிறைய வேலைகளைச் செய்ய வேண்டியிருக்கும், மேலும் நீங்கள் அதிக வேலையாக உணரலாம். இருப்பினும், நீங்கள் கவனம் செலுத்தி கடினமாக உழைத்தால், நீங்கள் விரும்பும் அனைத்தையும் அடைய முடியும். இந்த மாதம் நீங்கள் கூடுதல் வேலை அல்லது முதலீடு மூலம் கூடுதல் பணம் சம்பாதிக்கலாம். பணத்தைச் சேமிப்பதற்கும் எதிர்காலத்திற்காக முதலீடு செய்வதற்கும் இது ஒரு சிறந்த நேரம். காதல் வாழ்க்கையில், உங்கள் துணையுடன் முன்பை விட அதிகமாக நெருக்கமாக இருப்பதை நீங்கள் உணரலாம்.
கடக ராசிக்காரர்கள் வாழ்க்கையில் முன்னேற மிகவும் ஆர்வமாக இருப்பார்கள். ஆனால் சில தடைகள் காரணமாக பின்னடைவை உணரலாம். உங்கள் இலக்குகளில் கவனம் செலுத்துங்கள் மற்றும் அவற்றை எவ்வாறு அடையலாம் என்பதைத் திட்டமிடுங்கள். நீங்கள் உங்கள் தொழிலில் கடினமாக உழைத்தாலு, நீங்கள் விரும்பிய பலன்களைப் பெற முடியாது. அதனால் கொஞ்சம் யோசித்து செயல்படுவது சரியாக இருக்கும். நிதி ரீதியாக, இந்த மாதம் பற்றாக்குறையை உணரலாம். உங்கள் செலவுகளைக் கட்டுப்படுத்தவும். உங்கள் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும் மற்றும் உங்கள் பெற்றோர் உங்கள் முடிவுகளை ஆதரிப்பார்கள்.
சிம்ம ராசிக்காரர்கள் இந்த மாதம் மிகுந்த உற்சாகத்துடன் இருப்பார்கள். தற்போதைக்கு புதிய சவால்களை எதிர்கொள்ள தயாராக இருங்கள். உங்கள் இலக்குகளில் முன்னேற்றம் காண நீங்கள் நல்ல நிலையில் இருப்பீர்கள். பணியிடத்தில் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். இந்த நேரத்தில், உங்கள் பிரச்சினைகளுக்கு புதிய தீர்வைக் கொண்டு வருவீர்கள். நீங்கள் மற்றவர்களுடன் ஒருங்கிணைந்து நன்றாக வேலை செய்ய முடியும் மற்றும் மேலதிகாரிகளுடன் வலுவான உறவுகளை உருவாக்க முடியும். உங்கள் தந்தை உடல்நலப் பிரச்சினைகளை சந்திக்க நேரிடலாம். எனவே எச்சரிக்கையுடன் இருங்கள். உங்கள் உணவிலும் சில மாற்றங்களைச் செய்து உடற்பயிற்சியைத் தொடங்க இது ஒரு நல்ல நேரம்.
கன்னி ராசிக்காரர்கள் இந்த மாதம் தொழில் மற்றும் நிதி விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். உத்வேகத்துடன் இருங்கள் மற்றும் நீங்கள் கவனம் செலுத்தினால், உங்கள் எல்லா பணிகளையும் நீங்கள் அடைய முடியும். இருப்பினும், அளவிற்கு அதிக சுமைகளை சுமக்க வேண்டாம். ஏனெனில் அது சோர்வை ஏற்படுத்தும். ஓய்வெடுக்கவும் புத்துணர்ச்சி பெறவும் ஒவ்வொரு நாளும் உங்களுக்காக சிறிது நேரம் ஒதுக்குங்கள். உத்தியோகத்தில் முன்னேற்றம் அடைய இது மிகவும் நல்ல மாதம். நீங்கள் ஒரு புதிய வேலை அல்லது பதவி உயர்வு பெறலாம். நீங்கள் ஒரு புதிய வேலையைத் தேடுகிறீர்களானால், நெட்வொர்க்கிங் மற்றும் மக்களைச் சந்திப்பதற்கான நேரம் இது. எனினும், தனிப்பட்ட வாழ்க்கையில், நீங்கள் மன அழுத்தத்தை உணரலாம்.
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் வெற்றி வாய்ப்புகள் அதிகம். ஆனால் நீங்கள் பொறுமையாகவும் விடாமுயற்சியுடனும் இருக்க வேண்டும். உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு உதவக்கூடிய நபர்களுடன் தொடர்பு கொள்ளுங்கள். புதிய திறன்களைக் கற்றுக்கொள்வதிலும் அல்லது புதிய சவால்களை எடுப்பதிலும் நீங்கள் ஆர்வமாக இருக்கலாம். உங்கள் வழியில் வரும் புதிய வாய்ப்புகளை வரவேற்று பயன்படுத்திக் கொள்ளுங்கள். இந்த நேரத்தில் உங்கள் சேமிப்பை கவனித்து எதிர்காலத்தை திட்டமிடுங்கள். தற்போது, உங்கள் காதல் வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும். தனிமையில் இருந்தால், காதலுக்கான வலுவான வாய்ப்பு உள்ளது. போதுமான உடற்பயிற்சி செய்யவும். குடும்பம். நண்பர்களுடன் மகிழ்ச்சியாக ஒரு சிறிய பயணத்தைத் திட்டமிடலாம்.
விருச்சிக ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையின் நோக்கத்தையும் திசையையும் தீர்மானித்து, உங்களுக்காக சிறிது நேரம் ஒதுக்க வேண்டும். நீங்கள் விரும்புவதைத் துல்லியமாகக் கண்டறிய முயற்சி செய்யுங்கள். பணியிடத்தில் நீங்கள் சில சவால்கள் அல்லது காலக்கெடுவை சந்திக்க நேரிடலாம். இதன் காரணமாக நீங்கள் மன அழுத்தத்தை உணரலாம். முயற்சி செய்து உங்கள் மேலதிகாரிக்கு உங்களுக்கு என்ன திறமை இருக்கிறது என்பதைக் காட்டுங்கள். நிதி ரீதியாக நீங்கள் சற்று எதிர்மறையாக உணரலாம். உங்களால் முடிந்ததை விட அதிக பணத்தை செலவிட வேண்டாம். தனிப்பட்ட வாழ்க்கையில், உங்கள் அன்புக்குரியவர்களுடன் சில தரமான நேரத்தை செலவிடுங்கள்.
தனுசு ராசிக்காரர்கள் இந்த நேரத்தில், தன்னம்பிக்கை வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். உங்கள் ஆர்வத்தைப் பின்பற்றி செயல்படுத்துங்கள். தொழில் ரீதியாக, இந்த மாதம் நீங்கள் சில சவால்களை சந்திக்க நேரிடலாம். பணியிடத்தில் தேவையற்ற சர்ச்சைகளில் ஈடுபடுவதை தவிர்க்கவும். உங்கள் வேலையில் தொழில்முறை அணுகுமுறையை கடைப்பிடிக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். அன்புக்குரியவர்களுடன் உங்கள் உறவுகளை வலுப்படுத்த இது ஒரு நல்ல நேரம். உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் மனம் திறந்து உரையாடல் செய்யுங்கள். ஏனெனில் அது உங்களைபரஸ்பரம் நெருக்கமாக்கும்.
மகர ராசிக்காரர்களுக்கு தொழில் வாழ்க்கையில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் கடின உழைப்பின் பலனைப் பெறுவீர்கள். இது உங்களுக்கு புதிய வாய்ப்புகளுக்கான கதவுகளைத் திறக்கும். உங்கள் இலக்குகளில் கவனம் செலுத்தி அர்ப்பணிப்புடன் இருங்கள். இந்த மாதம் நிதி விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. இந்த மாதம் தேவையற்ற செலவுகளை தவிர்க்க வேண்டும். குடும்ப உறுப்பினர்களிடம் சச்சரவுகள் அல்லது கருத்து வேறுபாடுகள் வரக்கூடும் என்பதால் பொறுமையாக இருங்கள் மற்றும் புத்திசாலித்தனமாக செயல்படவும். எந்தவொரு பிரச்சினையையும் அமைதியாக தீர்க்க முயற்சி செய்யுங்கள். அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கும்ப ராசிக்காரர்கள் இந்த மாதம் தங்கள் வாழ்க்கையில் வரும் மாற்றங்களை ஏற்றுக்கொள்வது நன்மை தரும். எந்த சவாலையும் சமாளிக்கும் உங்கள் திறமையில் நம்பிக்கை வையுங்கள். உங்கள் வழியில் வரும் எந்தவொரு சவாலையும் சமாளிக்க திட்டமிட்ட நடவடிக்கைகள் உங்களுக்கு உதவும். எதிர்காலத்திற்காக சேமிப்பது மன அமைதியை தரும். இந்த ராசிக்காரர்கள் உங்கள் மீது அதிக ஆர்வமுள்ள ஒருவரை சந்திக்கலாம். குடும்ப உறுப்பினர்களுடனான உங்கள் உறவை ஆழப்படுத்த இந்த மாதம் வாய்ப்பளிக்கும். உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள்.
மீன ராசிக்காரர்களுக்கு இந்த ஜூலை மாதம் மிகவும் உற்சாகமான மாதமாக இருக்கும். இந்த மாதம் உங்களுக்கு பல வாய்ப்புகள் வரும். அவற்றை ஏற்றுக்கொண்டு செல்லுங்கள். உங்கள் சமூக வாழ்க்கையில் நண்பர்களுடன் தொடர்பு கொள்வீர்கள். நேர்மறையான மற்றும் உங்களுக்கு ஆதரவான நபர்களுடன் உங்களைச் சுற்றி வருவது உங்கள் உற்சாகத்தைத் தூண்டும் மற்றும் மதிப்புமிக்க நுண்ணறிவை வழங்கும். உங்கள் உள்ளத்தை நம்புங்கள் மற்றும் சில ரிஸ்குகளை எடுக்க பயப்பட வேண்டாம். நீங்கள் தனிமையில் இருந்தால், புதிய நட்புகளை தேட பயப்பட வேண்டாம். புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்வதன் மூலம் உங்கள் ஆக்கப்பூர்வமான பக்கத்தை ஆராயுங்கள். இயற்கையோடு இணைந்திருப்பது அமைதியையும் தெளிவையும் அளிக்கும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது