மாத ராசிபலன்: ஜூலை மாதம் அரசாளப்போகும் அதிர்ஷ்ட ராசிகள் இவைதான்.. உங்க ராசி என்ன?

July 2024 Monthly Horoscope:  ஜூலை மாதத்திலும், பல பெரிய கிரகங்கள் தங்கள் இயக்கத்தை மாற்றவுள்ளன. இவற்றின்  தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும்.

July 2024 Monthly Horoscope: சுக்கிரன் ஜூலை மாதத்தில் கடக ராசியில் பெயர்ச்சியாக உள்ளார். கிரகங்களின் அரசராகக் கருதப்படும் சூரியன் கடகத்தில் பெயர்ச்சியாவார். செவ்வாய், குரு மற்றும் சனி பகவானின் நிலைகளும் இந்த மாதம் மிக முக்கியத்துவம் வாய்ந்தவையக இருக்க உள்ளன. இவற்றின் அடிப்படையில் ஜூலை மாத லக்கி ராசிகள் எவை என இங்கே காணலாம்.

1 /9

ஜோதிட கணக்கீடுகளின் படி அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. இவை கிரக பெயர்ச்சிகள் என அழைக்கப்படுகின்றன, இந்த கிரக பெயர்ச்சிகளின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். 

2 /9

ஜூலை மாதம் பல முக்கிய கிரக மாற்றங்கள் ஏற்படவுள்ளன. இந்த ஜூன் மாத இறுதியில் சனி பகவான் வக்ர பெயர்ச்சி அடைந்துள்ளார். இதன் தாக்கமும் இந்த மாதம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். இது தவிர ஜூலை மாதம் சுக்கிரன், சூரியன் உள்ளிட்ட நான்கு முக்கிய கிரக மாற்றங்கள் ஏற்படவுள்ளன. 

3 /9

ஜூலை மாதம் நடக்கவுள்ள கிரக மாற்றங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நன்மைகள் நடக்கும். இவர்களுக்கு பண வரவு அதிகமாகும். வாழ்வில் வெற்றிகள் அதிகமாகும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.   

4 /9

ரிஷபம் : ஜூலை மாதம் ரிஷப ராசிக்காரர்களின் நிதி நிலை சிறப்பாக இருக்கும். வருமானம் அதிகரிப்பதால், நீங்கள் அதிக அளவில் பணத்தை சேமிக்க முடியும். உங்கள் வங்கி இருப்பு அதிகரிக்கும். சில முக்கியமான வேலைகளில் முன்னேற்றம் ஏற்படும். தொழிலதிபர்களுக்கு வியாபாரம் நன்றாக நடக்கும். இதனால் பொருளாதார ரீதியாக லாபம் அடைவார்கள். வேலை தேடிக்கொண்டிருக்கும் ரிஷப ராசிக்காரர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். 

5 /9

கன்னி: கன்னி ராசிக்காரர்களுக்கு ஜூலை மாதம் பல வழிகளில் நன்மை தரும். எதிர்பாராத இடங்களிலிருந்து பண வரவு இருக்கும். இது உங்களுக்கு இனிமையான உணர்வைத் தரும். செலவுகளும் குறைவாகவே இருக்கும். தொழில் வாழ்க்கையும் தனிப்பட்ட வாழ்க்கையும் சிறப்பாக இருக்கும்.

6 /9

விருச்சிகம்: ஜூலை மாத கிரக பெயர்ச்சிகளின் காரணமாக விருச்சிக ராசிக்காரர்களின் வருமானம் உயரும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இந்த சந்தோஷத்தில் உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும். இந்த நேரம் தொழிலதிபர்களுக்கும் தொழிலாள வர்க்கத்திற்கும் நல்லது. ஆனால் உற்சாகத்தில் சுயநினைவை இழக்காமல் கவனமாக இருங்கள். கடினமான காலங்களில் சிறிது பணத்தை சேமிக்கவும்.

7 /9

மகரம்: ஜூலை மாதம் மகர ராசிக்கார்ரகளுக்கு பண வரவு அதிகமாகி செல்வம் அதிகரிக்கும். இந்த காலத்தில் புதிய வீடு மற்றும் வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். கட்டுமானம் மற்றும் புதுப்பித்தல் தொடர்பான வேலையில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். மாதம் முழுவதும் உங்கள் கைகளில் போதுமான பணம் இருக்கும். வீட்டில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். நீங்கள் உங்கள் குடும்பத்துடன் சுற்றுலா செல்லலாம் அல்லது உள்ளூரில் தங்கி மறக்கமுடியாத அனுபவங்களைப் பெறலாம். 

8 /9

மீனம்: ஜூலை மாதம் மீன ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். பண வரவு அதிகமாவதால், வங்கி இருப்பு அதிகரிக்கும். பழைய முதலீடுகளிலிருந்தும் லாபம் பெறலாம். செல்வத்துடன் மரியாதையும் அதிகரிக்கும். குடும்பத்துடன் மகிழ்ச்சியான பொழுதை கழிப்பீர்கள். குழந்தைகளால் நல்ல செய்திகள் கிடைக்கும். 

9 /9

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.