Jio, Airtel, BSNL மற்றும் Vi வழங்கும் அசத்தலான மாதாந்திர ரீசார்ஜ் திட்டங்கள்

Jio, Airtel, BSNL  மற்றும் Vodafone-Idea ஆகியவை 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் பல மலிவான திட்டங்களை தங்கள் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்காக கொண்டு வந்துள்ளன. 

Jio, Airtel, BSNL  மற்றும் Vodafone-Idea ஆகியவை 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் பல மலிவான திட்டங்களை தங்கள் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்காக கொண்டு வந்துள்ளன. 

1 /5

28 நாட்கள் செல்லுபடியாகும் இந்த திட்டங்களில், தினசரி 1 ஜிபி வரை தரவு மற்றும் வரம்பற்ற அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் வசதி கிடைக்கின்றன என்பது சிறப்பு. இதைத் தவிர இந்த திட்டங்களில் வேறு பல சலுகைகளும் உண்டு

2 /5

ஏர்டெல்லில் ரூ.149 கட்டணத்திலான ப்ரீபெய்ட் திட்டத்தில் உங்களுக்கு மொத்தம் 2 ஜிபி இணைய தரவு வழங்கப்படுகிறது. 28 நாட்கள் செல்லுபடியாகும் இந்த திட்டத்தில், வரம்பற்ற அழைப்பு மற்றும் தினசரி 300 எஸ்எம்எஸ் வசதி உள்ளது. இதில், நீங்கள் 219 ரூபாய்க்கான ஒரு திட்டத்தையும் எடுக்கலாம். இந்த திட்டத்தில் தினசரி 1 ஜிபி இணைய தரவு மற்றும் 100 எஸ்எம்எஸ், 28 நாட்கள் செல்லுபடியாகும் மற்றும் வரம்பற்ற அழைப்பு ஆகியவை கிடைக்கின்றன.

3 /5

நீங்கள் ஒரு ஜியோ வாடிக்கையாளராக இருந்தால், 24 நாட்கள் செல்லுபடியாகும் வகையில் ரூ .149 கட்டணத்தில் மலிவான திட்டத்தைப் பெறுவீர்கள். இந்த திட்டத்தில், நீங்கள் தினசரி 1 ஜிபி தரவு மற்றும் வரம்பற்ற அழைப்பு வசதியைப் பெறுவீர்கள். இது தவிர, தினமும் 100 எஸ்எம்எஸ் அனுப்பலாம். மறுபுறம், 28 நாட்கள் செல்லுபடியாகும்  199 ரூபாய்க்கான திட்டத்தில், நீங்கள் தினசரி 1.5 ஜிபி இணைய தரவு, வரம்பற்ற அழைப்பு மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் பெறுவீர்கள்.

4 /5

நீங்கள் பிஎஸ்என்எல் பயனராக இருந்தால், உங்களுக்கு ரூ.187 ரீசார்ஜ் திட்டம் கிடைக்கும்.  28 நாட்கள் செல்லுபடியாகும், இந்த திட்டத்தில் தினமும் 2 ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்பு வழங்கப்படுகிறது. இந்த திட்டம் டெல்லி, மும்பை போன்ற எம்.டி.என்.எல் பகுதிகளிலும் முழுமையாக செயல்படும்.

5 /5

வோடபோன்-ஐடியாவில் ரூ .149  திட்டம், 28 நாட்கள் செல்லுபடியாகும். மொத்தம் 3 ஜிபி தரவு, வரம்பற்ற அழைப்பு மற்றும் தினசரி 300 எஸ்எம்எஸ் ஆகியவை கிடைக்கின்றன. அதே நேரத்தில், ரூ. 199 ரூபாய்க்கான திட்டத்தில், வரம்பற்ற அழைப்பு, தினசரி 1 ஜிபி இணைய தரவு மற்றும் 100 எஸ்எம்எஸ் ஆகியவை வழங்கப்படுகின்றன. ஆனால் திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 24 நாட்கள் மட்டுமே.