Jigarthanda DoubleX Teaser: மாஸாக வெளியாகியுள்ள ஜிகர்தண்டா டபுள்எக்ஸ் படத்தின் டீஸர்

Jigarthanda DoubleX Teaser: கார்த்திக் சுப்பராஜின் அடுத்த அதிரடி கேங்ஸ்டர் படத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர்.

 

1 /5

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் 2014-ம் ஆண்டு மதுரையை களமாக கொண்டு உருவாகிய படம் "ஜிகர்தண்டா". சித்தார்த் கதாநாயகனாக நடித்த இந்த படத்தில் லட்சுமி மேனன் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.   

2 /5

இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் பாபி சிம்ஹா நடித்திருந்தார். இந்த படத்துக்காக 2014-ம் ஆண்டின் தேசிய விருதை பாபி சிம்ஹா பெற்றார்.  

3 /5

8 வருடங்களுக்கு பிறகு ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.   

4 /5

இதில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படம் வருகிற தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.  

5 /5

இந்நிலையில், இப்படத்தின் டீசர் தற்போது யூடூப்பில் வெளியாகி ட்ரெண்டிங்கில் உள்ளது.