சனி பெயர்ச்சி பலன் 2023: ஷஷ ராஜயோகத்தால் இந்த ராசிகளுக்கு ஜாக்பாட்

ஜனவரி 17, 2023 அன்று சனி கிரகம் தனது ராசியை மாற்றி தனது சொந்த ராசியான கும்பத்தில் நுழையப் போகிறது. 30 ஆண்டுகளுக்குப் பிறகு சனி கும்ப ராசிக்கு மாறி 12 ராசிகளிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார். மார்ச் 29, 2025 வரை சனி கும்ப ராசியில் இருப்பார். சனியின் இந்த சஞ்சாரம் ஷஷ ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் அதிர்ஷ்டம் பெறப் போகும் ராசிகள் எவை என்று பார்ப்போம்.

1 /4

ரிஷப ராசி: ஷஷ ராஜயோகத்தால் ரிஷபம் ராசிக்காரர்களுக்கு பண பலன்கள் கிடைக்கும். புதிய வேலை வாய்ப்புகள் வந்து சேரும். புதிதாக தொழில் தொடங்க நினைத்தால் ஜனவரி 17க்கு பிறகு நல்ல காலம் அமையும்.  

2 /4

மிதுன ராசி: துயரங்கள் அனைத்தும் தீரும். வீட்டில் சுப காரியங்கள் நடக்கும். காதல் விஷயங்களில் வெற்றி உண்டாகும். புதிய வீடு, வாகனம் வாங்கலாம். நிலம் மற்றும் சொத்து தொடர்பான விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக அமையும்.  

3 /4

துலாம் ராசி: குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். கணவன்-மனைவி உறவு இனிமையாக இருக்கும். பிள்ளைகள் மூலம் சில நல்ல செய்திகள் கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். பண ஆதாயம் உண்டாகும்.  

4 /4

தனுசு ராசி: தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். மாணவர்கள் தங்கள் கடின உழைப்புக்கு ஏற்ற பலன்களைப் பெறுவார்கள். வீட்டில் திருமண நிகழ்ச்சிகள் நடைபெறலாம்.