வானில் இருக்கும் தாரகைகள் பூமியில் வந்து இறங்கியதோ என்ற வியப்பை ஏற்படுத்தும் கார்த்திகை திருநாள் தீபவொளி உற்சவம். இது ஈஷா யோக மையத்தின் தீபத் திருநாள் உற்சவப் புகைப்படத் தொகுப்பு...
அக்னித் தலமான திருவண்ணாமலையில் மலையே தீபமாக ஜொலித்தால், ஈஷா யோக மையத்தில் விண்ணில் இருக்கும் நட்சத்திரங்கள் மண்ணில் வந்து இறங்கியதோ என்ற ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. ஈஷாவின் கண்கவர் தீபவொளித் திருநாள் காட்சிகள் புகைப்படங்களாக...
கார்த்திகை மாதத்தில் பௌர்ணமி நாளன்று கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்து வரும் நாளில் இல்லங்களிலும் ஆலயங்களிலும் பிரகாசமான தீபங்களை ஏற்றி மகிழும் திருநாள் தீபத் திருநாள் கார்த்திகை
தீபங்களின் வரிசை தீபாவளி பண்டிகையில் என்பது வட இந்தியாவில் வழக்கம்.. தமிழகத்தில் கார்த்திகை மாதத்தில் தீபவொளித் திருநாள் கொண்டாடப்படுகிறது
தீபாவளி ஐப்பசி மாத அமாவசை நாளில் கொண்டாடப்படுகிறது... கார்த்திகை தீபத் திருநாள் கார்த்திகை மாத பெளர்ணமியன்று கொண்டாடப்படுகிறது
இது ஈஷாவின் கண்கவர் தீபத் திருநாள் காட்சிகள்
முருகன் ஆலயங்களில் கொண்டாடப்படுகிறது குமராலய தீபம்,
அனைத்து இந்து ஆலயங்களிலும் வீடுகளிலும் கார்த்திகை மாதத்து முழுமதி திதியன்று சர்வாலய தீபம் கொண்டாடப்படுகிறது.
விஷ்ணு ஆலயங்களில் கார்த்திகை மாதத்தில் ரோகினி நட்சத்திரம் வரும் நாளன்று விஷ்ணுவாலய தீபம் கொண்டாடப்படுகிறது.