டீ குடித்தால் தலைவலி சரியாகுமா... இது உண்மையா, பொய்யா...?

டீ குடித்தால் தலைவலி சரியாகும் என பலரும் நம்பி வரும் நிலையில், அது உண்மையா அல்லது போலியான தகவலா என்பது குறித்து இதில் விரிவாக காணலாம். 

  • Jul 25, 2024, 15:40 PM IST

டீ குடிப்பது இந்தியாவில் அதிகமானோரால் பின்பற்றப்படும் பழக்கவழக்கமாகும். அது குடித்தால் தலைவலி போகும் என்பது  பலரின் நம்பிக்கை. 

 

1 /8

ஒவ்வொருவருக்கும் பழக்கம்வழக்கம் என்பது ஒவ்வொரு விதத்தில் இருக்கும். ஆனால், இந்தியாவில் பெரும்பாலான மக்களுக்கு இருக்கும் பழக்கம் என்னவென்றால் அது டீ குடிப்பதுதான்.  

2 /8

காபியும் மக்கள் விரும்பி அருந்துவார்கள் என்றாலும் அனைத்து தரப்பினராலும் அதிகம் அருந்தப்படுவது என பார்க்கும்போது டீ தான் முன்னிலையில் வரும். மேலும் டீ பல்வேறு நேரங்களில் மருந்தாகவும் பயன்படுகிறது என மக்கள் நினைக்கின்றனர்.  

3 /8

மழையோ, பனியோ, வெயிலோ அல்லது அது இரவோ, பகலோ, நண்பகலோ டீயை எப்போது கொடுத்தாலும் குடிப்பதற்கு ஒரு கூட்டம் இருந்துக்கொண்டே இருக்கும். குறிப்பாக, கல்லூரி மாணவர்கள், இளைஞர்களுக்கு டீ தான் உலகமே என்று சொன்னால் அது மிகையாகாது.   

4 /8

அதிலும் சிலரோ காலையில் டீ குடிக்கவில்லை என்றால் அந்த நாள் முழுவதும் ஒரே தலைவலியாக இருப்பதாக புலம்பித் தள்ளிவிடுவார்கள். சுட சுட நுறை தள்ள டீ குடித்தால்தான் தலைவலி நிற்கும் என்பது சிலரின் நம்பிக்கையாக இருக்கிறது. டீ குடித்தால் தலைவலி நிற்குமா என தெரியாது, ஆனால் அதற்கு முந்தைய புலம்பல் நின்றுவிடும்.   

5 /8

ஆனால், மருத்துவர்களிடம் இதுகுறித்து கேட்கையில் டீ குடிப்பதற்கும், தலைவலி சரியாவதற்கும் இதுவரை எவ்வித ஆதாரமும் இல்லை என்கின்றனர். உடலில் நீர்ச்சத்து இல்லாத நேரத்தில் தலைவலி ஏற்படும், அப்போது நீங்கள் டீ குடித்தால் தலைவலியில் இருந்து நிவாரணம் கிடைக்கலாம். டீ குடித்ததால் தலைவலி போகவில்லை, தண்ணீர் குடித்தாலும் போகிவிடும் என்கின்றனர்.  

6 /8

இஞ்சி, ஏலக்காய் மற்றும் இலவங்கம் சேர்க்கப்பட்ட  தேநீர் சற்று தலைவலிக்கு நிவாரணம் அளிக்கக் கூடியதாக இருக்கலாம். வலி மற்றும் அசௌகரியத்தை குறைக்கும் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளன. மேலும், ஒற்றை தலைவலிக்கு இஞ்சி நிவாரணம் அளிக்கும் என 2020ஆம் ஆண்டில் ஒரு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

7 /8

நீங்கள் அதிகம் டீ குடித்தால் இரும்புச்சத்து குறைபாடு, நிம்மதியின்மை, பதற்றம், லேசான அல்லது தீவிரமான தலைவலி, மோசமான தூக்கம் ஆகிய பிரச்னைகள் வரலாம் என்கின்றனர். எனவே, டீ குடித்தால் தலைவலி வருமா அல்லது தலைவலி குணமாகுமா என்பதை உறுதிசெய்ய போதுமான ஆய்வுகள் இல்லை. இருப்பினும், குறைந்த அளவில் டீ குடிப்பதை வழக்கமாக வைத்திருந்தால் பல பிரச்னைகளை நீங்கள் தவிர்க்கலாம். (

8 /8

பொறுப்பு துறப்பு: இதனை பின்பற்றும் முன் மருத்துவ ஆலோசனையை பெறவும். Zee News இதனை உறுதிப்படுத்தவில்லை.