Aadi Month Shuklabaksh Dwadashi Vrat : ஆடி மாத சுக்ல பட்ச துவாதசியில், மகாவிஷ்ணுவை நினைத்து விரதம் மேற்கொண்டால், நினைத்ததெல்லாம் நடக்கும், கேட்டதெல்லாம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
அம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில், மகாவிஷ்ணுவுக்கு உகந்த நாள் சுக்ல பட்ச துவாதசி ஆகும். ஏனென்றால், இந்த மாதம் விஷ்ணு யோக நிதிதிரையில் இருக்கிறார். அவர் நித்திரையில் இருக்கும்போது அவரை நினைத்து வைக்கும் விரதம் அவரது ஆசிகளைப் பெற்றுத்தரும்.
ஆடி மாதத்தில், காக்கும் கடவுள் விஷ்ணுவும் அவரது பரிவாரங்களும் யோக நித்திரையில் இருப்பதால், வளர்பிறை தொடங்கியதும், அதாவது அமாவாசைக்கு அடுத்த நாளில் இருந்து துவாதசி வரையில் விரதம் இருந்து துளசியை வழிபட்டு வந்தால் ஆயுள் அதிகரிக்கும்.
ஆடி மாத வளர்பிறை துவாதசியன்று மிகவும் சிறப்பானது. அன்று பெருமாளுக்கு விரதம் இருப்பது மரண பயம் போக்கும்
வளர்பிறை துவாதசியன்று விரதம் இருக்கும்போது கோவிலுக்கு சென்று வழிபட வேண்டும்
அலங்கார பிரியரான பெருமாளுக்கு அலங்காரம் செய்வது நல்லது. விரதம் இருக்கும் நாளன்று காலையில் காலைக்கடன்களை முடித்தபிறகுக் வீட்டில் விளக்கேற்றுங்கள். வீட்டில் உள்ள பெருமாள் படத்துக்கு சந்தனம் குங்குமம் இட்டு வணங்குங்கள்
துவாதசி நாளன்று துளசி மாலை சார்த்துவதும் விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்வதும் மிகவும் விசேஷமானதாகும்
விஷ்ணு சகஸ்ர நாமம் ஜபிப்பது, துளசியால் அர்ச்சனை செய்வது, மரணத்திற்கு பிறகு வைகுந்தப் பதவியை கொடுக்கும் என்பது தொன்றுதொட்டு இருந்துவரும் நம்பிக்கை
புளியோதரை அல்லது தயிர்சாதம், அகத்திக் கீரை மற்றும் நெல்லிக்காயை சமையலில் சேர்க்கவும். இந்த உணவை நைவேத்தியம் செய்த பிறகு பிறருக்கு தானம் செய்தால் கோடி புண்ணியம் கிடைக்கும்
பாவங்களையெல்லாம் போக்கும் ஸ்ரீமந் நாராயணரை ஏகாதசி மற்றும் துவாதசி என இரு நாட்களிலும் தொடர்ந்து விரதம் வைத்து வழிபடுவது நூறு நாட்கள் விரதம் வைத்தற்கு சமமானதாகும்.