IRCTC Tour Package for Andaman and Nicobar: குறைவான பட்ஜெட் செலவில், உள்நாட்டில் பயணம் செய்ய திட்டமிட்டால், நீங்கள் அந்தமான் நிக்கோபார் செல்லலாம். மிக அழகான கடற்கரைகளை கொண்டுள்ள அந்தமான் - நிகோபார் தீவுகள் தென்னை மரம் சூழ்ந்த கடற்கரைகள், பசுமைக் காடுகள், பவளப் பாறைகள், அரிய வகை கடல் உயிரினங்கள், அருவிகள் போன்றவற்றைக் கொண்டுள்ளன.
இந்தியாவில் உள்ள யூனியன் பிரதேசங்களில் ஒன்றான அந்தமான் - நிகோபர் தீவுகள் சுற்றுலாவுக்கு மிகவும் ஏற்றது. குட்டி குட்டி தீவுகளாக இயற்கை எழில் கொஞ்சும் அந்தமானின் தலைநகராக போர்ட் பிளேயர் விளங்குகிறது.
அந்தமான நிக்கோபர் தீவுகளில் உள்ள பெரும்பாலான தீவுகள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக உள்ளன. சிறியதும் பெரியதுமாய் அந்தமான் - நிகோபாரில் மொத்தம் 572 தீவுகள் உள்ளன. இதில், 38 தீவுகளில் மட்டுமே மக்கள் வசிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சில தீவுகள் நீா்நிலைகளில் நடத்தப்படும் விளையாட்டுகள், சிற்றோடை சுற்றுலா உள்ளிட்டவைக்கு உகந்தவையாக இருக்கின்றன.
இந்திய ரயில்வேயின் துணை நிறுவனமான இந்தியன் ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) அந்தமான் மற்றும் நிக்கோபருக்கு டூர் பேக்கேஜ்களை வழங்குகிறது. அந்தமான் மற்றும் நிக்கோபாருக்குச் செல்வதற்கான ஏற்ற பருவம் இது. கடற்கரையில் உலாவும் போது நீர் சாகசத்தை அனுபவிக்கலாம்.
IRCTC உங்களுக்கு 5 இரவுகள் மற்றும் 6 பகல்களுக்கான டூர் பேக்கேஜை வழங்குகிறது. இந்திய ரயில்வேயின் (Indian Railways) ஐஆர்சிடிசியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின்படி, அந்தமான் மற்றும் நிக்கோபருக்கான இந்த டூர் பேக்கேஜ் ரூ.23900 என்ற அளவில் தொடங்குகிறது.
IRCTC வழங்கும் இந்த டூர் பேக்கேஜில் ஹோட்டல் மற்றும் உள்ளூர் போக்குவரத்து, உணவு அதாவது 5 நாட்களுக்கு காலை உணவு ஆகியவை அடங்கும். இந்த டூர் பேக்கேஜ் ஒருவருக்கு ரூ.23,900 என்ற கட்டணம் முதல் தொடங்குகிறது. அரசு ஊழியர்கள் இதில் எல்டிசியின் பலனைப் பெறலாம்.
அந்தமான் மற்றும் நிக்கோபருக்கான டூர் பேக்கேஜில் ஹோட்டல் மற்றும் உள்ளூர் போக்குவரத்து, உணவு ஆகியவை அடங்கும். இதில் விமானச் செலவுகள் அடங்காது என்பது குறிப்பிடத்தக்கது. விமான பயணத்தை நீங்களே புக் செய்து ஏற்பாடு செய்ய வேண்டும். நீங்கள் எப்போது வேண்டுமானாலும் இந்த டூர் பேக்கேஜை எடுத்துக் கொள்ளலாம். இதற்கு நிலையான கால நேரம், தேதி எதுவும் இல்லை.
IRCTC-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் டூர் பேக்கேஜ் குறித்த அனைத்து தகவல்களையும் பெறுவீர்கள். ஐஆர்சிடிசியின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.irctctourism.com என்ற தளத்தில் இந்த டூர் பேக்கேஜை முன்பதிவு செய்யலாம். இது தவிர உங்கள் உள்ளூர் IRCTC அலுவலகத்திற்குச் செல்லலாம்.