Allied Blenders IPO: Officer's Choice பிராண்ட் விஸ்கி தயாரிப்பாளரான Allied Blenders நிறுவனம், ரூ.1,500 கோடி ஆரம்ப பொது வழங்கல் (IPO) மூலம் நிதி திரட்டுகிறது. இந்த நடைமுறை ஜூன் 25 முதல் தொடங்குகிறது.
ஆஃபிசர்ஸ் சாய்ஸ் விஸ்கி நிறுவனத்தின் பங்கு விலை 267-281 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு பங்குச் சந்தை தொடர்ந்து ஏற்றத்தாழ்வுகளை கண்டு வரும் நிலையில், முதன்மை சந்தையும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. ஐபிஓக்கள் ஒன்றன் பின் ஒன்றாக திறக்கப்பட்டு முதலீட்டாளர்களுக்கு நல்ல வருமானம் கொடுத்து வருகிறது
கடந்த சில வாரங்களில் Awfis Space, Go Digit, Ixig என பல IPOக்கள் களம் இறங்கின. ஐபிஓவில் முதலீடு செய்வது சில்லறை முதலீட்டாளர்களுக்கு சந்தையில் நல்ல வருமானம் ஈட்டுவதற்கான ஒரு விருப்பமாக மாறியுள்ளது.
விஸ்கி தயாரிக்கும் நிறுவனமான Allied Blenders, அடுத்த வாரம் IPO கொண்டு வருகிறது, நிறுவனத்தின் உரிமையாளர்கள் பங்குகளை விற்கின்றனர்
ஆஃபீசர்ஸ் சாய்ஸ் விஸ்கி தயாரிப்பாளரான அலைட் பிளெண்டர்ஸ் ரூ.1,500 கோடி அளவிலான பங்குகளை ஐபிஓவில் விற்பனை செய்யும்.
ஆரம்ப பொதுப் பங்கு விற்பனை ஜூன் 25ஆம் தேதி தொடங்கும். ஒரு பங்கின் விலை வரம்பை ரூ.267-281 என நிறுவனம் நிர்ணயித்துள்ளது
ஐபிஓ ஜூன் 25 முதல் 27 வரை திறந்திருக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. பெரிய முதலீட்டாளர்கள் ஜூன் 24 அன்று பங்குகளை வாங்க முடியும்.
பங்கு வெளியீட்டிற்குப் பிறகு நிறுவனத்தின் சந்தை மூலதனம் ரூ.7,860 கோடியாக இருக்கும் தரகு நிறுவனங்கள் மதிப்பிட்டுள்ளன. ஆரம்ப பங்கு விற்பனையில் 1,000 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய பங்குகள் வெளியிடப்படும்.
இது தவிர, ரூ.500 கோடி மதிப்புள்ள பங்குகளை நிறுவகர்கள் விற்பனை செய்வதற்கான வாய்ப்பும் உள்ளது. OFS இன் கீழ், பினா கிஷோர் சாப்ரியா, ரேஷாம் சாப்ரியா, ஜிதேந்திர ஹேம்தேவ் மற்றும் நீஷா கிஷோர் சாப்ரியா ஆகியோர் பங்குகளை விற்பார்கள்.