சென்னை அணி தோனி, ருதுராஜ், ஜடேஜா, துபே, பத்திரனா ஆகியோரை தக்க வைத்துள்ளது. தற்போது சென்னை அணியிடம் 55 கோடி ஏல தொகை உள்ளது.
இளம் வேகப்பந்து வீச்சாளர் துஷார் தேஷ்பாண்டே, தீபக் சாஹர் மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோரில் யார் குறைந்த விலையில் கிடைப்பார்களோ அவர்களை அணியில் எடுக்க சென்னை அணி திட்டம் வைத்துள்ளது.
ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்தை அணியில் எடுக்க சென்னை திட்டம் வைத்துள்ளது. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள பந்த் அதிக விலைக்கு ஏலம் போவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் ரவிச்சந்திரன் அஷ்வினை எடுக்க திட்டம் வைத்துள்ளனர். ஆரம்பத்தில் அஸ்வின் சென்னை அணிக்காக விளையாடினார். கடந்த சில ஆண்டுகளாக ராஜஸ்தான் அணிக்காக விளையாடினார்.
நியூசிலாந்து சுழற்பந்து வீச்சாளர் மிட்செல் சான்ட்னர் மற்றும் விக்கெட் கீப்பர் டெவான் கான்வேயை மீண்டும் அணியில் எடுக்க சென்னை அணி திட்டம் வைத்துள்ளது.
நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திராவை ரைட் டு மேட்ச் கார்டை (RTM) பயன்படுத்தி ஏலத்தில் எடுக்க சிஎஸ்கே திட்டமிட்டுள்ளது. கடந்த ஆண்டு சென்னை அணிக்கு சிறப்பாக விளையாடி இருந்தார்.