ஆதிக்கத்தை தொடர குஜராத் குறிவைக்கும் முக்கிய வீரர்கள் இவர்கள்தான்...!

குஜராஜ் டைட்டன்ஸ் அணி இம்முறை பெரிய தொகையுடன் ஏலத்திற்கு வரும் நிலையில், இந்த 5 வீரர்களை வாங்கவே அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

 

  • Dec 07, 2023, 16:27 PM IST

ஐபிஎல் 2024 தொடரின் ஏலம் வரும் டிச.19ஆம் தேதி துபாயில் நடைபெறுகிறது. 

 

 

 

1 /7

குஜராத் டைட்டன்ஸ் (Gujarat Titans) கடந்த 2022 மற்றும் 2023 ஆகிய இரண்டு ஐபிஎல் சீசன்களில் விளையாடி உள்ளது. இதில், 2022ஆம் ஆண்டில் குஜராத் டைட்டன்ஸ் சாம்பியன் பட்டத்தை வென்றது. 2023ஆம் ஆண்டில் அந்த அணி இறுதிப்போட்டி வரை வந்தது.   

2 /7

தற்போது ஹர்திக் பாண்டியா (Hardik Pandya) மும்பை அணிக்கு டிரேட் ஆன நிலையில், இம்முறை பல வீரர்களையும் விடுவித்துள்ளது. சுப்மான் கில் (Shubman Gill) கேப்டனான நிலையில், அந்த அணி வரும் ஏலத்தில் எடுக்க அதிக வாய்ப்புள்ள 5 வீரர்களை இதில் காணலாம். 

3 /7

1. டேரில் மிட்செல்: உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடிய இவர் குஜராத் அணிக்கு தேவை எனலாம். வில்லியம்சன் இல்லாவிட்டால் இவரை மிடில் ஆர்டரில் இறக்கலாம். 

4 /7

2. ஷர்துல் தாக்கூர்: ஹர்திக் பாண்டியா இல்லை, ஆறாவது பந்துவீச்சாளர் ஆப்ஷனுக்கு இவரை பயன்படுத்தலாம். 

5 /7

3. அஸ்மதுல்லா ஓமர்ஸாய்: ரஷித் கான், நூர் அகமது என ஆப்கன் வீரர்களை வைத்திருக்கும் குஜராத் வெளிநாட்டு ஆல்-ரவுண்டர் ஆப்ஷனுக்கு இவரை வாங்கலாம். 

6 /7

4. நாராயண் ஜெகதீசன்: இந்திய மிடில் ஆர்டர் பேட்டர்கள் குஜராத் அணிக்கு தேவை. எனவே இவரையும் எடுக்க குஜராத் ஆர்வம் காட்டும். 

7 /7

5. கம்மின்ஸ்: வெளிநாட்டு ஆல்ரவுண்டர் ஆப்ஷனில் குஜராத் அணிக்கு கம்மின்ஸை கிளிக் செய்ய அதிக வாய்ப்புள்ளது. குஜராத் அணிக்கு ரூ.38.15 கோடி உள்ளதால் முன்னணி வீரர்களை வாங்க அதிக வாய்ப்புள்ளது.