Tax Saving Tips: வருமான வரி அதிகம் கட்ட வேண்டாமா? இந்த வழிகள் இருக்க கவலை ஏன்?

Plan & Save Income Tax: வரி செலுத்துபவர்களுக்கு மிகப் பெரிய கவலையாக இருப்பது எப்படி வரியைக் குறைப்பது என்று திட்டமிடுவது தான். இன்னும் சில நாட்களில் இந்த நிதியாண்டும் முடிந்துவிடும். எனவே மார்ச் 31க்கு முன் இந்த விஷயங்களைச் செய்தால் வருமான வரியை குறைக்கலாம் 

நடப்பு நிதியாண்டு 31 மார்ச் 2023 அன்று முடிவடைகிறது. வரியைச் சேமிக்க மார்ச் 31, 2023க்கு முன் சில நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலமும் உங்கள் வரியைச் சேமிக்கலாம். 

 

1 /7

வரியைச் சேமிக்க மார்ச் 31க்கு முன் இதைச் செய்யுங்கள் 

2 /7

வருமான வரியின் 80சி பிரிவின் கீழ் ரூ. 1.5 லட்சம் வரை சேமிக்கலாம். இதற்காக, PPF, ELSS, EPF, வரி சேமிப்பு FD மற்றும் பிறவற்றில் முதலீடு செய்யலாம்

3 /7

இது தவிர, தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் (என்பிஎஸ்) முதலீடு செய்வதன் மூலமும் வரியைச் சேமிக்கலாம். இது ஒரு புத்திசாலித்தனமான முதலீட்டு வழி ஆகும். 

4 /7

வரி செலுத்துவோர் பிரிவு 80சியின் கீழ் ரூ. 1.5 லட்சத்துக்கு மேல் ரூ.50,000 கூடுதல் விலக்கு கோரலாம்.

5 /7

வரி செலுத்துவோர் தங்கள் மனைவி மற்றும் குழந்தைகளுக்கான உடல்நலக் காப்பீட்டு பிரீமியத்திற்கு ரூ.25,000 வரை விலக்கு கோரலாம். இது தவிர, வரி செலுத்துபவர் தனது பெற்றோருக்கு மருத்துவக் காப்பீடு வடிவில் ரூ.25,000 கூடுதல் விலக்கு கோரலாம். உங்கள் பெற்றோர் மூத்த குடிமக்களாக இருந்தால், அவர்களின் மருத்துவக் காப்பீட்டிற்காக நீங்கள் ரூ. 50,000 பெறலாம்.

6 /7

வரி செலுத்துவோர் மின்சார வாகனத்தை வாங்கியிருந்தால், அதன் கடனுக்கான வட்டியில் ரூ.1.5 லட்சம் வரை விலக்கு கோரலாம்.

7 /7

வரி செலுத்துவோர் வீட்டுக் கடனில் கிடைக்கும் வரிச் சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதில் அசல் தொகை மற்றும் வட்டி செலுத்துதல் ஆகிய இரண்டும் அடங்கும். வருமான வரிச் சட்டத்தின் 80சி பிரிவின் கீழ் ரூ.1.5 லட்சமும், பிரிவு 24பியின் கீழ் ரூ.2 லட்சமும் விலக்கு பெறலாம்.