மகிழ்ச்சி ஹார்மோன்களை தூண்டும் 8 யோகா பயிற்சிகள்! காலையில் செய்யலாம்..

International Yoga Day 2024 Asanas That Will Boost Happy Hormones : உடலில் மகிழ்ச்சி ஹார்மோன்களை தூண்டும் சில ஈசியான யோகா பயிற்சிகள். 

International Yoga Day 2024 Asanas That Will Boost Happy Hormones : சர்வதேச யோகா தினம், இன்று (ஜூன் 21) கொண்டாடப்படுகிறது. நாம் வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்க எந்தெந்த விஷயங்களையோ செய்வோம். ஏன் யோகா செய்யக்கூடாது? சில யோகாப்பயிற்சிகள் உங்களது மகிழ்ச்சி ஹார்மோன்களை தூண்டும் என்பது உங்களுக்கு தெரியுமா? அவை என்னென்ன என்பதை இங்கு பார்ப்போம்.

1 /8

வீரபத்ராசனம்: நம் வாழ்வில் தீராப்பிணியாக பிடித்துக்கொண்டிருக்கும் மனச்சோர்வை, வீரபத்ராசனம் ஆசனத்தை கொண்டு தீர்க்கலாம். இதை செய்தால் உடனே நமது மனச்சோர்வு நீங்கும் என கூறப்படுகிறது.

2 /8

உத்தனாசனம்: மனநிலையை மேம்படுத்த, நினைவாற்றலை விரிவாக்க உத்தனாசனத்தை செய்யலாம். இது, மன நலனுக்கு மட்டுமன்றி உடல் நலனுக்கு நன்மை பயக்கும் ஆசனங்களுள் ஒன்றாகும். 

3 /8

உத்காட்டா கோணாசனம்: உடல் முழுவதும் உள்ள தசைகளுக்கு ரத்த ஓட்டத்தை செலுத்தும் யோகாசனங்களுள் இதுவும் ஒன்று. இதை செய்வதால் மகிழ்ச்சி ஹார்மோன்கள் பெருகி, நம்மால் பாசிடிவாக யோசிக்க முடியுமாம்.

4 /8

சவாசனம்: இந்த ஆசனத்தை எந்த வயதுடையவர்களும் செய்யலாம். கை கால்களை அகட்டி உடல் பக்கங்களில் வைத்து, தசைகளை தளர்த்தி அப்படியே படுத்துக்கொள்ள வேண்டும்.

5 /8

நடராஜாசனம்: இது, பொதுவாக பரத நாட்டியத்தில் உபயோகிக்கப்படும் ஒரு போஸ் ஆகும். இதனால்தான் இதற்கு இப்பெயர் வந்த்தாக கூறப்படுகிறது. மனப்பதற்றத்தை போக்கி, நன்றாக தூங்க உதவும் யோகாசனங்களுள் ஒன்று இது.

6 /8

பத்த கோணாசனம்: இதை ஆங்கிலத்தில் butterfly pose என்று குறிப்பிடுவர். உங்களை மகிழ்ச்சிப்படுத்த வேண்டுமென்றால் கண்டிப்பாக இந்த ஆசனத்தை தினமும் செய்யலாம். 

7 /8

ஆனந்த பாலாசனம்: அதிகமாக யோசிப்பவர்கள் இந்த யோகாசனத்தை கண்டிப்பாக செய்யலாம். இது, உங்கள் மனதை நிதானமாக செயல்படவைக்க உதவும். உங்கள் மனதில் மகிழ்ச்சியையும் வரவழைக்கும். 

8 /8

அதோ முக்கா ஸ்வானாசனம்: அதோ முக்கா ஸ்வானாசனம் உடற்பயிற்சியை நம் மனநிலையை மகிழ்ச்சி படுத்துவதற்காக செய்யலாம். இது, தலை முதல் கால் வரை அனைத்து உடல் பாகங்களுக்கும் ரத்தஓட்டம் செல்வதற்கு உதவும்.