நாளை சர்வதேச மகளிர் தினம். உங்கள் வாழ்க்கையின் அஸ்திவாரமாக இருக்கும் மனைவி, சகோதரி, தாய், நண்பர் மற்றும் காதலிக்கு நீங்கள் என்னவெல்லாம் பரிசாக கொடுக்கலாம்?
ஆண்டுதோறும், மார்ச் 8ஆம் தேதியன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது, இது வாழ்வை வசந்தமாக்கும் பெண்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு நாளாகும். இந்த நாள் பெண்களின் சாதனைகளை கொண்டாடுவதற்கும், பெண்களின் சமத்துவம் மற்றும் பாலின ஏற்றத்தாழ்வு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் ஆகும்.
Also Read | பிறந்தவீட்டில் இருந்து வழி அனுப்பும்போது அழுதழுது இறந்த மணப்பெண்
பெண்கள் பற்றி கதைகள் எழுதிய பெண் எழுத்தாளர்கள் ஏராளம். இந்த நாளில், உங்கள் வாழ்க்கையில் சிறப்பு பெண்களுக்கு பெண்கள் பற்றி பெணக்ள் எழுதிய புத்தகத்தை பரிசாக வழங்கலாம்.
உங்கள் வாழ்க்கையில் சிறப்பு முக்கியத்துவம் பொருந்திய பெண்களுக்கு ஒரு அழகான நெக்லஸ் அல்லது காதணிகளை பரிசளிக்கவும், உங்களை மகிழ்ச்சியடையச் செய்யும் அவர்களுக்கு நீங்கள் செலுத்தும் அன்பு கலந்த நன்றி அது. நகையை வாங்கிக் கொடுப்பது மட்டுமல்ல, அதை போடும்போது ரசித்து பாராட்டினால் அது கொடுக்கும் மகிழ்ச்சி வாழ்க்கையை வசந்தமாக்கும்.
தொற்றுநோய் பரவலால் பெண்கள் தவறவிட்ட ஒரு விஷயம் இருக்கிறது, அதுதான் ஸ்பா. ஆனால் இப்போது நடைமுறைகள் மாறி வருவதால், வீட்டிலேயே ஸ்பா சேவை செய்யும் வசதிகள் இருக்கின்றன. உங்கள் அன்புக்குரியவருக்கு நீங்கள் ஸ்பா சேவையை வீட்டிலேயே கொடுக்க பதிவு செய்யலாம்.
மிகவும் பொதுவான ஆனால் பயனுள்ள வகை பரிசு செடிகள். தாவரங்கள் அன்பை அடையாளப்படுத்துகின்றன, அவை வளர்வது போலவே அன்பும் வளரும். கற்றாழை (Aloe Vera) போன்ற சில செடிகளை பரிசாக கொடுத்தால், மனதுக்கும் இதமாக இருக்கும். சரும பாதுகாப்புக்கும் உதவியாக இருக்கும்.
இந்த சர்வதேச மகளிர் தினத்தன்று, உங்கள் வாழ்க்கையில் சிறப்பு சேர்க்கும் பெண்களுடன் மதிய உணவு அல்லது இரவு உணவிற்குச் செல்வதன் மூலம் நேரத்தை செலவிடுங்கள். இது நெருக்கத்தை அதிகரிக்கும்.