முருகக் கடவுளை தமிழ்க் கடவுள் என்று அழைக்கிறோம். முருகனை சிவனின் மைந்தனாக நாம் நினைத்து சிவகுமரன் என்றால், இந்த நம்பிக்கை இந்தியாவின் பல பகுதிகளில் மாறுபடுகிறது.
தமிழர்களின் நம்பிக்கைகளின்படி, முக்கண்ணனின் இளைய மகன் முருகன், மூத்த மகன் விநாயகர். ஆனால், வட இந்திய நம்பிக்கையின்படி, கணபதியின் அண்ணன் கார்த்திகேயன் என்னும் முருகன்...
மேலும் படிக்க | பணக்கார கடவுள் திருப்பதி பெருமாள் ஏன் குபேரனுக்கு வட்டி மட்டும் கட்டுகிறார்?
கார்த்திகேயனுக்கு ஆறு தலைகள் உண்டு என்பதால் தான், அவருக்கு சண்முகன் என்ற பெயர் வந்தது என்பது நமக்குத் தெரியும். ஆனால், வட இந்திய நம்பிக்கையின் படி, சண்முகன் முருகனுக்கு ஆறு மனைவிகள்!
கார்த்திக்கின் மற்றொரு பெயர் முருகன். மயூரவாஹனன் முருகனின் வாகனமாக இருக்கும் மயில் ஒரு அரக்கன். முருகன் அவரை தோற்கடித்து தனது வாகனமாக மாற்றிவிட்டார்
அப்பனுக்கே பாடம் எடுத்த சிவகுரு முருகன். ஓங்கார தத்துவத்தை தெரிந்துக் கொள்ள, தன்னை குருவாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று மகன் விதித்த நிபந்தனையை ஏற்றார் அப்பன் சிவன்.
முருகனின் மனைவிகள் வள்ளி மற்றும் தெய்வானை என்பது தமிழர்களின் நம்பிக்கை என்றால், விஷ்ணுவின் இரண்டு மகள்களான அமிர்தவல்லி மற்றும் சுந்தரவல்லியை மணந்தவர் முருகன் என்பது வட இந்தியர்களின் நம்பிக்கை ஆகும்.
கார்த்திகை மாத வழிபாடு என்பது, வட இந்தியாவிலும் உண்டு. ஆனால் அதற்கான காரணம் தான் மாறுபடுகிறது. கார்த்திக் எனப்படும் முருகனைப் போன்ற கணவன் கிடைக்க வேண்டும் என்பதற்காக கன்னிப் பெண்கள் கார்த்திகை மாதத்தில் பிராத்தித்தால், அழகிய மணாளன் கிடைப்பான் என்பது வட இந்திய நம்பிக்கை
முருகன் போர் கடவுள். அசாதாரண வலிமை மற்றும் இராணுவ திறமை கொண்ட தேவசேனாபதி முருகர்.