Time Deposit: சேமிப்புக்கு அதிக வட்டி தரும் அஞ்சலக திட்டத்தின் அதிகபட்ச வட்டி விகிதம்!

Interest Rates Of Post Office schemes: ஆபத்து இல்லாத சேமிப்பாகவும், சுலபமாக அணுகக்கூடியதாகவும் இருக்கும் தபால் நிலையத்தின் வைப்புத் திட்டங்கள் மிகவும் பிரபலமானவை. அஞ்சல் அலுவலக சேமிப்புத் திட்டங்கள் வரியைச் சேமிக்கிறது, உத்தரவாதமான வருமானத்தைத் தருகிறது...

  • May 14, 2024, 12:10 PM IST

TDS Saving Plans: அஞ்சல் அலுவலகத்தின் சிறு சேமிப்புத் திட்டமான 'டைம் டெபாசிட்' (Time Deposit) வரிச் சேமிப்புக்கான சிறந்த திட்டமாகும். போஸ்ட் ஆபிஸ் டைம் டெபாசிட் கணக்கை நாட்டின் எந்த தபால் அலுவலகத்திலும் திறக்கலாம். இந்தத் திட்டத்தின் கீழ், 5 ஆண்டுகளுக்கு  செய்யும் டெபாசிட்களுக்கு வரியை மிச்சப்படுத்தலாம்

1 /8

தபால் நிலையத்தின்  வைப்புத் திட்டம் வங்கிகளின் நிலையான வைப்புத்தொகையைப் போன்றது. 1, 2, 3, 5 ஆண்டுகளுக்கு தபால் அலுவலக நேர வைப்பு கணக்கு தொடங்கலாம். இதில், 5 வருட டெபாசிட்களுக்கு வரி விலக்கின் பலன்கள் கிடைக்கும்

2 /8

அஞ்சல் அலுவலக சேமிப்புத் திட்டத்தில் பணத்தை சேமித்தால், நாம் கட்டும் வரியைச் சேமிக்கலாம். மேலும், உத்தரவாதமான வருமானம் கிடைக்கும்

3 /8

நாட்டில் உள்ள இரண்டு வகையான வரி முறைகளில்,. பிரிவு 80C இன் வரி விலக்கு பழைய வரி முறையில் மட்டுமே கிடைக்கும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்  

4 /8

வருமான வரிச் சட்டம் 1961 இன் பிரிவு 80C இன் படி, 5 வருட டெபாசிட்டில் ரூ.1.5 லட்சம் வரை வரி விலக்கு பெறலாம். ஆபத்து இல்லாத முதலீட்டை தேர்ந்தெடுப்பவர்களுக்கு, தபால் நிலைய நிலையான வைப்புகளில் முதலீடு செய்வது நல்ல தேர்வாக இருக்கும்

5 /8

போஸ்ட் ஆபிஸ் நெட் பேங்கிங் மூலம் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் கணக்கு தொடங்கலாம். போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட் கணக்கை தனியாகவோ அல்லது கூட்டாகவோ (3 உறுப்பினர்கள் வரை) திறக்கலாம்

6 /8

தற்போதைய வட்டி விகிதங்கள் எவ்வளவு என்பதைத் தெரிந்துக் கொண்டு பணத்தை சேமிக்கத் தொடங்கவும். 1 வருட டெபாசிட்களுக்கு 6.9 %, 2 ஆண்டுகளுக்கு 7.0% என்றால், மூன்று ஆண்டுகளுக்கு 7.1 % மற்றும் 5 ஆண்டு டெபாசிட்களுக்கு 7.5% என வட்டி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

7 /8

POTD கணக்கில் முன்கூட்டியே அல்லது முதிர்வுக்கு முன் பணத்தை எடுக்க வசதி உள்ளது. இது முதிர்ச்சிக்கு முன் திரும்பப் பெறுதல் என்று அழைக்கப்படுகிறது. விதிகளின்படி, கணக்கு தொடங்கிய நாளிலிருந்து 6 மாதங்களுக்குப் பிறகு முதிர்வுக்கு முன் பணம் எடுக்கலாம். கணக்கு தொடங்கிய நாளிலிருந்து 6-12 மாதங்களுக்குள் பணம் எடுத்தால், தபால் அலுவலக சேமிப்புக் கணக்கு விகிதங்களின்படி வட்டி கிடைக்கும்.

8 /8

பொறுப்புத் துறப்பு:  இந்த கட்டுரை இணையத்தில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. ஜீ மீடியா இந்த தகவல்களை தனிப்பட்ட முறையில் உறுதிப்படுத்தவில்லை