U19 World Cup: 19 வயதுகுட்பட்டோர் உலக கோப்பையை வென்று கொடுத்த இந்திய கேப்டன்கள்..!

19 வயதுகுட்பட்டோருக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. 

 

1 /5

விராட் கோலி:  இந்திய அணியின் ரன் மெஷனும், நட்சத்திர பேட்ஸ்மேனுமான விராட் கோலி 2008-ல் இந்தியாவுக்காக 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்றார். அதன்பிறகு அவர் இந்திய அணியின் மூன்று வடிவங்களிலும் கேப்டனாக இருந்தார். 

2 /5

யாஷ் துல்:  2022ஆம் ஆண்டு யாஷ் துல் தலைமையில் இந்திய அணி 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்றது. உலகக் கோப்பையில் யாஷ் சிறப்பாக விளையாடினார். ஐபிஎல்லில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு விளையாடிய அவரால் இந்திய அணிக்குள் நுழைய முடியவில்லை. 

3 /5

முகமது கைஃப்:  முகமது கைஃப் தலைமையிலான இந்திய அணி 2002ஆம் ஆண்டு முதன்முறையாக 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்றது. இதன்பிறகு இந்திய சீனியர் அணியில் கைஃப் இடம்பிடித்தார். கைஃப் இந்தியாவுக்காக 13 டெஸ்ட் மற்றும் 125 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

4 /5

உன்முக்த் சந்த்:  உன்முக்த் சந்த் தலைமையிலான இந்திய அணி 2012-ம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்றது. சந்த் அடுத்த விராட் கோலி என்று அழைக்கப்பட்டார். ஆனால், அவரால் தொடர்ந்து சிறப்பாக விளையாட முடியாமல் போனது. வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. இப்போது அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்திருக்கும் அவர், அந்நாட்டு தேசிய கிரிக்கெட் அணியில் விளையாட இருக்கிறார்.

5 /5

பிருத்வி ஷா:  2018 ஆம் ஆண்டில், பிரித்வி ஷாவின் தலைமையில் ஐசிசி 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை இந்தியா வென்றது. உலகக் கோப்பைக்குப் பிறகு, அவர் ஐபிஎல்லில் சிறப்பாக விளையாடினாலும் இந்திய அணியில் தொடர்ச்சியாக இடம் கிடைக்கவில்லை.