CWG 2022: காமன்வெல்த் போட்டிகளில் கலக்கி தலை தூக்கிய இந்திய பேட்மிண்டன் வீரர்கள்

Commonwealth Games 2022: காமன்வெல்த் போட்டிகளில் கலக்கிய இந்திய வீரர்களும் வீராங்கனைகளும்...  

பி.வி.சிந்து, லக்ஷ்யா சென் முதல் கலப்பு அணியினர் என இந்த ஆண்டு காமன்வெல்த் போட்டிகளில் வெற்றிவாகை சூடிய இந்திய ஷட்லர்களின் வெற்றி நடை...

மேலும் படிக்க | 2022 காமன்வெல்த் போட்டிகள் நிறைவு - 4-வது இடத்தைப் பிடித்த இந்திய அணி

1 /6

பெண்கள் ஒற்றையர் பிரிவில் தங்கத்துடன் திரும்பிய பிவி சிந்து, இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்றவர், கனடாவின் மிச்செல் லியை 21-15, 21-13 என்ற செட் கணக்கில் தோற்கடித்து தங்கத்தை வென்றார். (புகைப்படம்: AFP)

2 /6

20 வயதான லக்ஷ்யா சென், மலேசிய ஷட்லர் என்ஜி ட்ஸே யோங்கைத் தோற்கடித்து, ஆண்கள் ஒற்றையர் பிரிவில் பதக்கம் வென்ற நான்காவது இந்தியர் ஆனார். பிரகாஷ் படுகோன், சையத் மோடி மற்றும் பாருபள்ளி காஷ்யப் ஆகியவர்களின் வரிசையில் சிடபிள்யூஜியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்றார்.

3 /6

கிடாம்பி ஸ்ரீகாந்த் CWG 2022 இல் இந்தியாவிற்காக பதக்கம் வென்றார். கலப்பு குழு நிகழ்வின் ஒரு பகுதியாக இருந்த 29 வயதான ஷட்லர் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் வெண்கலம் வென்றார்

4 /6

மகளிர் இரட்டையர் பிரிவில் ட்ரீசா ஜாலி-காயத்ரி கோபிசந்த் ஜோடி ஆஸ்திரேலிய ஜோடியான ஹ்சுவான்-யு வெண்டி சென்/க்ரோன்யா சோமர்வில்லி ஜோடியை வீழ்த்தி வெண்கலம் வென்றது. இந்திய ஜோடி 21-15, 21-18 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று மேடையில் மூன்றாவது இடத்தைப் பிடித்தது. (புகைப்படம்: AFP)

5 /6

ஆடவர் இரட்டையர் பிரிவில் சிராக் ஷெட்டி-சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி ஜோடி 21-15 மற்றும் 21-13 என்ற கணக்கில் இங்கிலாந்தின் பென் லேன் மற்றும் சீன் வென்டி ஜோடியை  வீழ்த்தி தங்கம் வென்றது. இந்த ஜோடி  2018 காமன்வெல்த் போட்டிகளில் வெள்ளிப் பதக்கத்தை வென்றது. (புகைப்படம்: AFP)

6 /6

கலப்பு குரூப் போட்டியில் இந்திய பேட்மிண்டன் அணி வெள்ளி வென்றது. நடப்பு சாம்பியனாக இருந்த இந்திய அணி, மலேசியாவுக்கு எதிராக 1-3 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்து, வெள்ளிப் பதக்கத்துடன் திருப்தி பெற வேண்டியிருந்தது.   பெண்கள் ஒற்றையர் ஆட்டத்தில் பிவி சிந்து மட்டுமே வெற்றி பெற முடிந்தது, மற்றவர்கள் படுதோல்வியடைந்தனர். (புகைப்படம்: ட்விட்டர்)