இந்திய இரயில்வே போக்குவர்த்தில் முக்கிய ஆதாரமாக உள்ளது. ஒவ்வொரு நாளும் கோடிக்கணக்கான மக்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல ரயிலில் பயணிக்கின்றனர்.
ரயில்வே லக்கேஜ் விதிகள்: நீங்களும் ரயிலில் பயணம் செய்தால், இந்த செய்தி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
ரயிலில் பயணம் செய்யும்போது எத்தனை கிலோ லக்கேஜ்களை எடுத்துச் செல்ல வேண்டும் தெரியுமா? இல்லையென்றால், இதனை முழுமையாக படியுங்கள்.
விமான பயணங்களுக்கு கட்டுப்படு இருப்பது போல், பயணத்தின் போது உங்களுடன் லக்கேஜ்களை எடுத்துச் செல்வது தொடர்பான விதிகளையும் ரயில்வே வகுத்துள்ளது.
ரயில்வே விதிகளின்படி, ரயிலில் பயணம் செய்யும் போது பயணிகள் 40 முதல் 70 கிலோ வரையிலான லக்கேஜுடன் பயணிக்கலாம். இது அவர்கள் பயணிக்கும் வகுப்புகளுக்கு ஏற்ப அளவு மாறுபடும்.
ரயில் விதிகளில் குறிப்பிட்ட விட அதிகமான லக்கேஜுடன் பயணம் செய்தால், அதற்கு தனியாக கட்டணம் செலுத்த வேண்டும்.
ரயில்வே விதிகளின்படி, ரயில் பெட்டிக்கு ஏற்ப லக்கேஜ் எடை வித்தியாசமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ரயிலின் ஸ்லீப்பர் வகுப்பில் பயணிப்பவர்கள் 40 கிலோ வரையிலான லக்கேஜை எடுத்து செல்லலாம்.
ரயிலின் இரண்டாவது ஏசியில் 50 கிலோ, முதல் ஏசியில் 70 கிலோ என்ற அளவிற்கு எடையுள்ள லக்கேஜ்களை பயணிகள் எடுத்துச் செல்லலாம்.