2020 மார்ச் 21 முதல் ஜூன் 31 வரை ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்கான பணத்தைத் திரும்பப்பெறுவதற்கான கால அவகாசத்தை இந்திய ரயில்வே தற்போதைய 6 மாதங்களிலிருந்து 9 மாதங்களாக நீட்டித்துள்ளது.
கோவிட் தொற்றுநோய் காரணமாக ஏற்பட்ட சூழ்நிலையை கருத்தில் கொண்டு, ரயில்வே அமைச்சகம் கால வரம்பை தற்போதைய ஆறு மாதங்களிலிருந்து ஒன்பது மாதங்களாக நீட்டித்துள்ளது. முன்னதாக, கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவல் காரணமாக வழக்கமான அனைத்து ரயில் சேவைகளையும் ரத்து செய்யும் நிலை ஏற்பட்டது.
முன்பதிவு கவுண்டரில் வாங்கிய டிக்கெட்டுகளை ரத்து செய்து பணத்தை திரும்ப பெறுவதற்காக கால அவகாசத்தை ஆறு மாதங்களில் இருந்து ஒன்பது மாதங்கள் வரை நீட்டித்துள்ளது. மார்ச் 21, 2020 முதல் ஜூலை 31, 2020 வரையிலான காலத்தில் வாங்கிய டிக்கெட்டுகளுக்கான பணத்தை திரும்ப பெறுவதற்கான கால அவகாசம் 9 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என ரயில்வே அமைச்சக அறிக்கை தெரிவிக்கிறது.
பயணத்தின் தேதியிலிருந்து ஆறு மாதங்கள் வரை கவுண்டரில் வாங்கிய டிக்கெட்டுகளை சமர்ப்பிக்க தளர்வு வழங்கப்பட்டுள்ளது. இந்திய ரயில்வே ரத்துசெய்த வழக்கமான ரயில்களுக்கு மட்டுமே இந்த தளர்வுகள் பொருந்தும்.
ரயில் டிக்கெட்டுகள் 139 மூலமாகவோ அல்லது அதிகாரப்பூர்வ ஐ.ஆர்.சி.டி.சி வலைத்தளம் மூலமாக பெற்ற இ-டிக்கெட் ரத்து செய்யப்பட்டால், மேற்கூறிய பயண காலத்திற்கு, அத்தகைய டிக்கெட்டுகளை முன்பதிவு கவுண்டரில், சமர்பிப்பதற்கான கால அவகாசம், பயணத்தின் தேதியிலிருந்து ஒன்பது மாதங்கள் வரை நீட்டிக்கப்படுகிறது.
பயணத்தின் தேதியிலிருந்து ஆறு மாதங்கள் கழித்து, பல பயணிகள் டிக்கெட்டுகளை மண்டல ரயில்வேயின் அலுவலகத்திற்கு பயண டிக்கெட் ரசீது மூலமாகவோ அல்லது அசல் ரயில் டிக்கெட்டுகளுடன் பொது விண்ணப்பதையும் சேர்த்து சமர்பித்திருக்கலாம். அத்தகைய கவுண்டர் டிக்கெட்டுகளுக்கும் முழுமையாக பணம் கிடைக்கும் .
முன்னதாக, COVID-19 நிலைமையைக் கருத்தில் கொண்டு டிக்கெட்டுகளை ரத்து செய்தல் மற்றும் கட்டணத்தைத் திருப்ப பெறுதல் தொடர்பான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன. இந்திய ரயில்வே ரத்துசெய்த ரயில்களுக்கான அறிவுறுத்தல்களின்படி, பயணத்தின் நாளிலிருந்து மூன்று நாட்களுக்குப் பதிலாக, பயணத் தேதியிலிருந்து ஆறு மாதங்கள் வரை கவுண்டரில் வாங்கிய டிக்கெட்டுகளை சமர்ப்பிக்க தளர்வு வழங்கப்பட்டுள்ளது.