இந்திய கடலோர காவல்படையின் அதிரசி நடவடிக்கையில் மிகப் பெரிய கடத்தல் பிடிபட்டது. இலங்கை படகுகள் மற்றும் அவர்களது 19 குழுவினர் இந்திய அதிகாரிகளின் கூட்டு விசாரணைக்காக கேரளாவின் விழிஞ்சியம் நகருக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
போதைப்பொருள் கடத்தல் தொடர்பான துப்பு கிடைத்ததன் அடிப்படையில், இந்திய கடலோர காவல்படை வான் மற்றும் கடல் வழியாக மார்ச் 18 ஆம் தேதியன்று வியாழக்கிழமை இந்தியாவின் மேற்கு கடற்கரையில் உள்ள லட்சத்தீவு பிராந்தியத்தில் இருந்து மூன்று இலங்கை படகுகளை தடுத்து நிறுத்தியது. மூன்று கப்பல்களில் நடத்திய தேடுதல் வேட்டையில் 300 கிலோ உயர் ரக ஹெராயின், 1000 வெடி குண்டுகள், 5 ஏ.கே-47 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன, பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு சுமார் 3000 கோடி ரூபாய் ஆகும்.
Also Read | Salary அதிகரித்தாலும், ஏப்ரலில் இருந்து முன்பைவிட குறைவான சம்பளம் தான் கிடைக்கும்!
மார்ச் 15 ஆம் தேதி கிடைத்த தகவல்களின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மார்ச் 18 அவர்கள் மினிகோய்க்கு தெற்கே சந்தேகத்திற்கிடமாக சென்றுக் கொண்டிருந்த கப்பல்கள் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டன.. ரெட்ஹான்சி என்ற மீன்பிடி படகில் தொழில்நுட்பக் கோளாறு இருந்தது. இரண்டு நாட்கள் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு, மறைத்து வைக்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டன
இந்தியாவின் கடலோர காவல்படையின் கூற்றுப்படி, இது மேற்கு கடற்கரையிலிருந்து ஒரு பதினைந்து நாட்களுக்குள் மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது பெரிய போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கையாகும். மார்ச் 5 ஆம் தேதி, இதேபோன்ற நடவடிக்கையில், மினிகோய் தீவில் இருந்து இலங்கை கப்பலான அகர்ஷா துவாவை சிஜி சுற்றி வளைக்கப்பட்டது. ஆறு பணியாளர்களுடன் இருந்த அந்த படகில் 200 கிலோ ஹெராயின், 60 கிலோ ஹாஷிஷ் என போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
நவம்பர் 2020 இல், கன்னியாகுமரியில் இருந்து இலங்கை படகு ஷெனயா துவா சுற்றி வளைக்கப்பட்டது. 120 கிலோ போதைப்பொருட்கள், ஆயுதங்கள் என சுமார் 1000 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கடந்த ஒரு வருடத்தில், கடலோர காவல்படை கிட்டத்தட்ட ரூ .4,900 கோடி மதிப்புள்ள சுமார் 1.6 டன் போதைப்பொருட்களைக் கைப்பற்றியுள்ளது.