Indian 2 Memes : இந்தியன் 2 டிரைலரை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்! வைரலாகும் மீம்ஸ்..

Indian 2 Trailer Memes : ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து வரும் இந்தியன் 2 திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில், படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. இதை ரசிகர்கள் பலர் இணையத்தில் கலாய்த்து வருகின்றனர். 

Indian 2 Trailer Memes : கமல்ஹாசன் நடிப்பில்  உருவாகியிருக்கும் இந்தியன் 2 திரைப்படத்தின் டிரைலர், நேற்று வெளியானது. கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியன் 2 படத்தின் பணிகள் நடைப்பெற்று வந்ததை தொடர்ந்து, ஒரு வழியாக இந்த ஆண்டின் தொடக்கத்தில்தான் அனைத்து பணிகளும் முடிவு பெற்றது. 26 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியிருப்பது, ரசிகரகளின் எதிர்பார்ப்பை இன்னும் தூண்டும் வகையில் இருக்கிறது. இந்தியன் 2 டிரைலருக்கு ஒவ்வொரு ரசிகர்கள், ஒவ்வொரு வகையான விமர்சனத்தை கொடுத்து வருகின்றனர். சில சேட்டை பிடித்த நெட்டிசன்கள், இந்த படத்தின் டிரைலரை மீம்ஸாக மாற்றி பொளந்து வருகின்றனர். அவற்றை இங்கு பார்ப்போம். 

1 /8

இந்தியன் 2 டிரைலரில் 108 வயதாகும் ‘சேனாபதி’ பலரை அடித்து துவம்சம் செய்வது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தது. இதை கலாய்த்து பதிவிடப்பட்டிருக்கும் மீம்ஸ்.

2 /8

க்ரூப்ல டூப்பு..வித்தியாசத்த கண்டுபிடிங்க பாக்கலாம்?

3 /8

இது எவன் பார்த்த வேல டா! 

4 /8

காஜல் அகர்வால் ரசிகர்கள் பீ லைக்: அப்போ எங்க தலைவிய பாக்க அடுத்த வருஷம் வரைக்கும் காத்திருக்கனுமா?

5 /8

பொறு தம்பி..படம் ஆவது நல்லா இருக்கான்னு பாப்போம்...

6 /8

ஒரு தரப்பு ரசிகர்கள் டிரைலர் நன்றாக இருக்கிறது என்று கூற, ஒரு சிலர் மொத்தமாக அனைத்து காட்சிகளையும் கலாய்த்து வருகின்றனர். இடையில் இப்படி சில பேர் என்ன செய்வது என்று தெரியாமல் மாட்டிக்கொண்டிருக்கின்றனர்....

7 /8

தேவையில்லாத ஆணிங்க அது...

8 /8

1996ல் வெளியான இந்தியன் படத்தை சிங்கமாகவும், 2024 இந்தியன் 2 படத்தை பூனையாகவும் மாற்றி மீம்ஸ் போட்டுக்கொண்டு வருகின்றனர்.