IND vs SA Final: 2024 டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் விளையாட உள்ளது. இந்திய அணியின் சாத்தியமான விளையாடும் லெவன் 11 பற்றி பார்ப்போம்.
குல்தீப் யாதவ் மற்றும் பும்ரா குல்தீப் யாதவ் மற்றும் பும்ராவின் பவுலிங் இந்திய அணிக்கு பக்கபலமாக உள்ளது. குல்தீப் ரிஸ்ட் ஸ்பின், ஜஸ்பிரித் பும்ராவின் துல்லியமான யார்க்கர் பேட்ஸ்மேன்களை திணறடிக்கிறது. இவர்கள் நிச்சயம் விளையாடுவார்கள்.
அர்ஷ்தீப் சிங் மற்றும் அக்சர் படேல் அர்ஷ்தீப் சிங் பவர்பிளேயில் விக்கெட்களை வீழ்த்தி ஒரு அடித்தளத்தை செட் செய்கிறார். மறுபுறம் அக்சர் படேலும் ஒன்று அல்லது இரண்டு ஓவர்கள் பந்து வீசி விக்கெட்களை எடுக்கிறார். அரை இறுதியில் இந்தியா வெற்றி பெற அக்சர் படேலும் ஒரு காரணம்.
ரவீந்திர ஜடேஜா மற்றும் ஹர்திக் இந்தியாவின் சிறப்பான ஆல் ரவுண்டர்கள் ஹர்திக் பாண்டியா மற்றும் ரவீந்திர ஜடேஜா பேட்டிங், பீல்டிங், பவுலிங் என இந்திய அணிக்கு தூண்களாக உள்ளனர். இருவரும் இந்த சீசன் முழுவதும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.
சிவம் துபே ஐபிஎல்லில் சிறப்பாக விளையாடிய சிவம் துபே இந்த உலக கோப்பையில் அவ்வளவாக ரன்கள் அடிக்கவில்லை. இருப்பினும் இன்றைய பைனல் போட்டியில் தென்னாப்பிரிக்காவின் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக மிடில்-ஆர்டர் பவர்-ஹிட்டிங் கொடுக்க முடியும்.
சூர்யகுமார் யாதவ் மற்றும் ரிஷப் பந்த் சூர்யகுமார் யாதவ் மற்றும் ரிஷப் பந்த் இந்த சீசன் முழுவதும் முக்கியமான வீரர்களாக இருந்து வருகின்றனர். இவர்களின் பேட்டிங் பல போட்டிகளை இந்தியாவிற்கு சாதகமாக மாற்றி உள்ளது.
விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா அணியின் மூத்த வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா முக்கியமான வீரர்களாக உள்ளனர். விராட் கோலிக்கு இந்த சீசன் எடுபடவில்லை என்றாலும், ரோஹித் சர்மா பேட்டிங் மற்றும் கேப்டன்சியில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.