ஆர் அஷ்வின் வங்காளதேச டெஸ்ட் தொடருக்கு முன்னதாக தனது ஓய்வு திட்டங்களை பற்றி விரிவாக பேசியுள்ளார். தற்போது 516 டெஸ்ட் விக்கெட்களை எடுத்துள்ளார்.
இந்திய அணியின் முக்கிய சுழற்பந்து வீச்சாளராக ரவிச்சந்திரன் அஷ்வின் இருந்து வருகிறார். தற்போது டெஸ்ட் போட்டிகளில் மட்டும் விளையாடி வரும் அஸ்வின் தனது எதிர்காலம் குறித்து பேசியுள்ளார்.
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது பற்றி இன்னும் சிந்திக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். விரைவில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி நடைபெற உள்ள நிலையில் இதனை தெரிவித்துள்ளார்.
என் மனதில் இப்போதைக்கு அப்படி ஒரு எண்ணம் இல்லை. தற்போது ஒவ்வொரு நாளும் கூடுதல் முயற்சி மற்றும் பயிற்சி செய்து வருகிறேன். கடந்த 3-4 ஆண்டுகளாக நிறைய முயற்சி செய்து வருகிறேன்" என்று தெரிவித்துள்ளார் அஸ்வின்.
ரவிச்சந்திர அஸ்வின் ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சாளர் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளார். 516 டெஸ்ட் விக்கெட்டுகளுடன் இந்தியாவின் 2வது அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அனில் கும்ப்ளே 619 விக்கெட்களுடன் முதல் இடத்தில் உள்ளார்.
நான் எந்த இலக்கையும் அமைத்து கொள்ளவில்லை. அனில் கும்ப்ளே சாதனையை முறியடிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை. முடிந்தவரை ஒவ்வொரு போட்டியிலும் எனது முழு திறனை கொண்டு வர முயற்சி செய்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
தற்போது எனது கரியரின் முக்கிய கட்டத்தில் மகிழ்ச்சியாக இருக்கிறேன். எனக்கு கிரிக்கெட் வரவில்லை என்றால், அன்றே ஓய்வை அறிவிப்பேன். வேறொருவர் வந்து இந்திய கிரிக்கெட்டைச் சிறப்பாக செய்வார் என கூறினார்.