இந்தியான்னு வந்தா அடிப்பேன்! Travis Head இதுவரை செய்துள்ள சாதனைகள்!

IND vs AUS: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டியில் டிராவிஸ் ஹெட் சிறப்பாக விளையாடி சதம் அடித்துள்ளார்.

1 /6

ஆஸ்திரேலியா வீரர் டிராவிஸ் ஹெட் இந்திய அணிக்கு எதிராக தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகிறார். பல போட்டிகளை தனி ஒருவராக வென்று கொடுத்துள்ளார்.

2 /6

இந்தியாவிற்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணி தடுமாற்றத்தில் இருந்த நிலையில் சதம் அடித்து அணியை சரிவில் இருந்து மீட்டுள்ளார் டிராவிஸ் ஹெட். இதற்கு முன்பும் பலமுறை இந்தியாவிற்கு எதிராக முக்கியமான நாக் ஆடியுள்ளார்.

3 /6

2023ம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ICC உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023 இறுதிப்போட்டியில் இந்தியாவிற்கு எதிராக 163(174) ரன்கள் அடித்தார். இதனால் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது.

4 /6

2023ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ICC ஓடிஐ உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் 137(120) ரன்கள் அடித்து இந்தியாவின் உலக கோப்பை கனவை சுக்கு நூறாக உடைத்தார்.

5 /6

இந்த ஆண்டு நடைபெற்ற ICC டி20 உலகக் கோப்பையின் சூப்பர் 8 சுற்றில் இந்தியாவிற்கு எதிராக 76(43) ரன்கள் அடித்தார். இருப்பினும் ஆஸ்திரேலியா அணி தோல்வி அடைந்தது.  

6 /6

தற்போது நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் தொடரின் 2வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி தடுமாற்றத்தில் இருந்த போது 140 ரன்கள் அதிரடியாக அடித்துள்ளார்.