மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் அவர்களுக்கு புகைப்படங்கள் மூலம் நினைவஞ்சலி!

மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் அக்டோபர் 8 ஆம் தேதியன்று காலமானார். 74 வயதான பாஸ்வானின் மரணம் குறித்து, அவரது மகனும் எல்ஜேபி தலைவருமான சிராக் பாஸ்வான் தெரிவித்தார்

1 /11

ராம் விலாஸ் பாஸ்வான் இந்திய தலித் அரசியலின் முக்கிய தலைவர்களில் ஒருவர். 6 பிரதமர்களுடன் பணியாற்றிய தனித்துவமான வரலாறு கொண்ட பாஸ்வான் அரசியலில் சேருவதற்கு முன்பு பீகார் நிர்வாக சேவையில் அதிகாரியாக இருந்தார்.  (Photo credits: Twitter/@irvpaswan)

2 /11

1975ஆம் ஆண்டில் எமர்ஜென்சியின் போது சிறையில் வைக்கப்பட்ட ராம்விலாஸ் பாஸ்வான், 15 மாதங்களுக்கு பிறகு சுதந்திர காற்றை அனுபவித்தார் என்று லோக் ஜன்சக்தி கட்சியின் வலைதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.     (Photo credits: Twitter/@irvpaswan)

3 /11

 2000வது ஆண்டில் ஜனதா தளத்தில் இருந்து பிரிந்து வந்த ராம்விலாஸ் பாஸ்வான், லோக் ஜன்சக்தி என்ற கட்சியை ஆரம்பித்தார்.   (Photo credits: Twitter/@irvpaswan)

4 /11

சொல்லொண்ணா துயரடைந்திருப்பதாக பிரதமர் கவலை தெரிவித்துள்ளார்.  (Photo credits: Twitter/@narendramodi)

5 /11

ராம்விலாஸ் பாஸ்வானின் மரணத்திற்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்திருக்கும் பிரதமர் மோடி ட்விட்டரில் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், "நான் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட வருத்தத்தில் இருக்கிறேன். நம் நாட்டில் ஒருபோதும் நிரப்பப்படாத ஒரு வெற்றிடம் ஏற்பட்டுவிட்டது. ஸ்ரீ ராம் விலாஸ் பாஸ்வான் அவர்களின் மறைவு எனக்கு ஏற்பட்ட தனிப்பட்ட இழப்பு. நான் ஒரு நண்பரை இழந்துவிட்டேன், மதிப்புமிக்க சக ஊழியரை இழந்துவிட்டேன். ஒவ்வொரு ஏழை மனிதனும் கண்ணியமான வாழ்க்கையை நடத்துவதை உறுதி செய்வதில் மிகுந்த ஆர்வமுள்ள ஒருவரை நாம் இழந்துவிட்டோம் " என்று பிரதமர் வருத்தத்தை பதிவு செய்துள்ளார்.   (Photo credits: Twitter/@narendramodi)

6 /11

(Photo credits: PTI)

7 /11

ராம் விலாஸ் பாஸ்வானின் மரணம் குறித்து குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த், துணைத் தலைவர் எம்.வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பல மத்திய அமைச்சர்கள், அரசியல்வாதிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துள்ளனர்.   (Photo credits: ANI)

8 /11

"Papa… Now you are not in this world but I know you are always with me wherever you are. Miss you Papa ..." என்று மகன் சிராக் பாஸ்வான், தந்தையின் மரணம் குறித்து டிவிட்டரில் செய்தி வெளியிட்டிருந்தார்.  (Photo credits: ANI)

9 /11

மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் அக்டோபர் 8 ஆம் தேதியன்று காலமானார். 74 வயதான பாஸ்வானின் மரணம் குறித்து, அவரது மகனும் எல்ஜேபி தலைவருமான சிராக் பாஸ்வான் தெரிவித்தார். நீண்ட காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த அவர், கடந்த பல நாட்களாக டெல்லியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.  (Photo credits: Twitter/@irvpaswan)

10 /11

பிஹாரின் மும்மூர்திகள் ஒன்றாக இணைந்து..... (Photo credits: ANI)

11 /11

பிஹார் மாநில முன்னாள் முதல்வர் லாலு யாதவுடன் ராம் விலாஸ் பாஸ்வான்  (Photo credits: PTI)