இரண்டு வாரங்களுக்கு படபிடிப்பு ரத்து செய்யப்படுவதாக `Jurassic World: Dominion` திரைப்பட இயக்குநர் Colin Trevorrow தெரிவித்தார். படபிடிப்புக் குழுவில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. "Woke up to the news we had a few positive Coronavirus tests on Jurassic World: Dominion. All tested negative shortly after, but due to our safety protocols we’re going to pause for two weeks. Back soon," என்று Trevorrow டிவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ளார். Chris Pratt, Bryce Dallas Howard உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்கும் இந்த திரைப்படத்தின் குழுவினரில் யாருக்கெல்லாம் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது வெளியிடப்படவில்லை. (Source: Reuters)
டைனோசரின் சாகசத்தை சித்தரிக்கும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதம் தான் இங்கிலாந்தில் மீண்டும் தொடங்கியது, கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த கடுமையான நெறிமுறைகளும் கடைபிடிக்கப்பட்டன. இதற்கு முன்னதாக, மார்ச் மாத நடுப்பகுதியில் கொரோனா பரவலின் தாக்கத்தால் திரைப்பட படபிடிப்பு நிறுத்தப்பட்டிருந்தது. (Source: Reuters)
இதற்கு முன்னதாக கொரோனாவால் `The Batman` திரைப்படமும் ஒத்தி வைக்கப்பட்டது `Jurassic World: Dominion கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஹாலிவுட் திரைப்படம் ஆகும். (Source: Reuters)
`Jurassic World: Dominion` திரைப்படம் 2022 ஜுன் மாதத்தில் வெளியிடப்படும். (Source: Reuters)
`Jurassic World: Dominion` திரைப்படத்தை முடிக்க இன்னும் மூன்று வாரம் படபிடிப்பு நடைபெற வேண்டும். (Source: ANI)