இன்னும் 4 நாட்களில் சனி உச்சம், இந்த 5 ராசிகளுக்கு கஷ்ட காலம்

நீதிபதியின் கடவுளான சனி பகவான் மார்ச் 6-ம் தேதி இரவு சுமார் 11.36 மணிக்கு கும்ப ராசியில் உச்சம் பெறயுள்ளார். இதனால் ஐந்து ராசிக்காரர்களுக்கு சிரமங்களை அதிகரிக்கும், கஷ்ட காலம் தொடங்கும். அவை எந்தெந்த ராசிக்காரர்கள் என்பதை தெரிந்துக்கொள்வோம்.

1 /5

மேஷ ராசி: முதலீடு செய்பவர்களுக்கு இக்காலம் சாதகமாக இருக்காது. செலவுகள் அதிகரிக்கும், வருமானம் தடைபடும். பணத்தட்டுப்பாடு மற்றும் பண நெருக்கடி அதிகரிக்கலாம். கடன் மற்றும் செலவுகளால் சிரமப்படலாம்.  

2 /5

கன்னி ராசி: குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கலாம். பண பரிவர்த்தனைகளில் சிறப்பு கவனம் தேவை. பேச்சில் கட்டுப்பாடு இல்லாததால் உறவுகள் மோசமடைந்து காணப்படும். திருமண வாழ்க்கையிலும் பிரச்சனைகள் வரலாம்.  

3 /5

விருச்சிக ராசி: வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். வணிக வகுப்பினருக்கு நேரம் சாதகமாக இருக்காது. திருமண வாழ்வில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். கணவன்-மனைவிக்குள் விரிசல் அதிகரிக்கலாம். வீட்டில் மன உளைச்சல், மன அழுத்தம் போன்ற பிரச்சனைகள் வரலாம்.  

4 /5

மகர ராசி: உடன்பிறந்தவர்களுடன் தகராறு ஏற்படலாம். தொழில் ரீதியாகவும் நேரம் சவாலாக இருக்கும். சனியின் உதயத்திற்குப் பிறகு தொழில் வாழ்க்கையில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.  

5 /5

மீன ராசி: பண விரயம் ஏற்படும். தேவையற்ற செலவுகள் வரும். தொழில்-வியாபாரத்தில் லாபம் குறையலாம். விபத்து ஏற்படும் வாய்ப்புகள் இருப்பதால் கவனமாக வாகனத்தை ஓட்டவும்.