26 நாட்களில் குரு வக்ர நிவர்த்தி.. இந்த ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம்

Guru Margi 2023: டிசம்பர் 31 ஆம் தேதி, குரு மேஷ ராசியில் வக்ர நிவர்த்தி அடையப் போகிறது. எனவே மேஷம், ரிஷபம், மிதுனம் ஆகிய ராசிக்காரர்களுக்கு புத்தாண்டு எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

ஜோதிடத்தின்படி, ஒவ்வொரு கிரகத்தின் நிலையிலும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், தெய்வங்களின் குருவான வியாழனின் ஸ்தானத்தில் ஏற்படும் மாற்றம், 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையை ஏதோ ஒரு வகையில் நிச்சயம் பாதிக்கிறது. தேவர்களின் குரு தற்போது தனது சொந்த ராசியான மேஷத்தில் அமர்ந்துள்ளார். 2023 ஆம் ஆண்டின் இறுதியில் அதாவது டிசம்பர் 31 ஆம் தேதி குரு வக்ர நிவர்த்தி மேஷ ராசியில் நகர்கிறது. குரு வக்ர நிவர்த்தியால் சில ராசிக்காரர்கள் வாழ்வில் சிறப்பான பலன்களைப் பெறலாம். இப்படிப்பட்ட நிலையில் மேஷம், ரிஷபம், மிதுனம் ஆகிய ராசிக்காரர்களுக்கு புத்தாண்டு எப்படி இருக்கப் போகிறது என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

1 /6

கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு தொழிலில் எதிர்பார்த்த பலன்களைத் தரும் வியாழன். நீங்கள் பாராட்டப்படுவீர்கள். புதிய பொன்னான வாய்ப்புகள் அமையும். நிலம், வாகனம் வாங்கலாம். வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். கூட்டுத் தொழில் தொடங்க நல்ல நேரம். முக்கிய முடிவுகள் எடுப்பதில் வெற்றி பெறுவீர்கள். பொருளாதார நிலையும் முன்பை விட சிறப்பாக இருக்கும்.  

2 /6

சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களுக்கு குரு வக்ர நிவார்த்தி அடைந்து மேஷ ராசியில் நுழைவது மிகுந்த பலன் தரும். வருமானம் அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். பணம் வருவதற்கான பாதைகள் உருவாகும். புதிய வேலை வாய்ப்பு கிடைக்கலாம். மேலும் நீங்கள் அபரிமிதமான வெற்றியையும், பணப் பலன்களையும் பெறலாம்.  

3 /6

கன்னி: குருவின் வக்ர நிவர்த்தி கன்னி ராசிக்காரர்களுக்கு புத்தாண்டில் சிறப்பான வாய்ப்புகளை தரும். உங்கள் வருமானம் அதிகரிக்கும். முதலீடு செய்வதற்கு ஏற்ற காலம். நல்ல வருமானம் கிடைக்கும். குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். திருமணம் செய்து கொள்ள நினைப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும். செல்வம் சேர்ப்பதில் வெற்றி கிடைக்கும். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பும் கிடைக்கும். வேலை நன்றாக இருக்கும்.   

4 /6

தனுசு: குருவின் வக்ர நிவர்த்தி தனுசு ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியை அள்ளித்தரும். தொழில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அதிகம். பொருளாதார நிலை வலுவாக இருக்கும். காதல் வாழ்க்கையும் சிறப்பாக இருக்கும். புத்தாண்டில் உங்கள் தொழிலை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.  

5 /6

மீனம்: மீன ராசிக்கு அதிபதியான வியாழன், தற்போது வரவிருக்கும் குருவின் வக்ர நிவர்த்தி மூலம் பெரும் பலன்களை மீனா ராசிக்காரர்கள் அடைவார்கள். பணம் தொடர்பான விஷயங்களில் நீங்கள் விரும்பிய முடிவுகளைப் பெறலாம். பல சிறந்த வருமான வாய்ப்புகளை பெறுவீர்கள். வியாபாரமும் நன்றாக நடக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்படலாம்.

6 /6

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.