நகை கடன் வாங்க போறீங்களா... ‘இந்த’ தப்பை செஞ்சுடாதீங்க!

அவசர பணத் தேவைகளை பூர்த்தி செய்ய நகைக் கடன்கள், கை கொடுக்கும் ஆபத்பாந்தவன்களாக இருக்கின்றன. எளிய மக்கள் தங்களின் அவசர தேவைகளுக்கு நகைக் கடன்களையே அதிகம் நம்பி இருக்கின்றனர். 

1 /7

எளிய மக்கள் அவசர பணத் தேவைகளை பூர்த்தி செய்ய  நகைக் கடன்களையே அதிகம் நம்பி இருக்கின்றனர். ஏனெனில், நகைக் கடன்களுக்கு பிணை ஏதும் தேவை இல்லை. நீங்கள் கொடுக்கும் தங்க நகையின் மதிப்புக்கு ஏற்ப கடன் தொகை வழங்கப்படும். கடன் தொகை பொதுவாக வழங்கப்படும் தங்கத்தின் அளவு மற்றும் தூய்மையின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. 

2 /7

நகைகளை அடகு வைக்கும் நிறுவனத்தின் நம்பகத்தன்மையை உறுதி செய்ய வேண்டும் ஒரு வீடு அல்லது நிலத்தை அடமானம் வைத்து கடன் வாங்கும் போது, அந்த வீடு அல்லது நிலத்தை யாரும் எடுத்துச் செல்ல முடியாது. ஆனால், நகையை பொறுத்த வரை அப்படி அல்ல.

3 /7

நிதி நிறுவனங்கள் நகையை வாங்கிக் கொண்டு கடன் தரும் நிலையில் திடீரென அந்த நிதி நிறுவனத்தில் திருட்டு போனால் நமக்கு நகைகள் திரும்ப கிடைக்க வாய்ப்பு மிக குறைவு. அதேபோல் திடீரென நிதி நிறுவனங்கள் நஷ்டம் காரணமாக மூடினாலும் நமது நகைகள் நமக்கு கிடைக்காமல் போகலாம்.

4 /7

நகைக்கடன் மிகவும் எளிதாக கிடைக்கிறது என்பதற்காக நம்பகத்தன்மையற்ற நிறுவனத்திடம் நகைகளை அடகு வைத்து கடன் வாங்கினால், அசலுக்கே மோசம் ஏற்படும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

5 /7

ரிசர்வ் வங்கியின் உத்தரவுபடி நகையின் மதிப்பில் 75 சதவீதம் மட்டுமே கடனாக வழங்க வேண்டும் என்ற விதி உள்ளது. எனவே, சில நிதி நிறுவனங்கள் கூடுதலாக நகைக்கடன்களை வழங்கி ஈர்க்க பார்ப்பார்கள். எனவே எச்சரிக்கை தேவை. 

6 /7

நம்பகத்தன்மையற்ற நிதி நிறுவனங்களிடம் நகைகளை அடகு வைக்க கூடாது. அதே போல் நகைக்கடனுக்கான வட்டி எவ்வளவு என்பதை அறிந்து கொண்டு, மற்ற வங்கிகள் அல்லது நிறுவனங்கள் வழங்கும் வட்டியை ஒப்பிட்டி பார்த்து நகை கடன் வாங்க வேண்டும்.

7 /7

நகைக்கடனுக்கான வட்டியை பொருத்தவரை அரசு துறை வங்கிகளில் நகைக்கடனுக்கு குறைந்த வட்டி இருக்கும் என்பதால் வங்கிகளில் அடகு வைப்பதே சிறந்தது. அதேபோல் வங்கிக் கடன் வாங்கும்போது செயல்பாட்டு கட்டணம், மதிப்பீடு கட்டணம் எவ்வளவு என்பதையும் கவனிக்கவேண்டும்.