டீனேஜ் வயதுக்கு பிறகு 20 வயதில் உள்ள கல்லூரி செல்லும் மாணவர்கள் பலரும் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல்வேறு விதமான மாற்றங்களை எதிர்கொள்கின்றனர்.
திட்டமிடுதல் என்பது அனைவரது வாழ்க்கையிலும் வெற்றிபெற உதவுகிறது, கல்லூரி மாணவர்கள் ஒவ்வொரு வார ஞாயிற்றுக்கிழமைகளும் அந்த வாரம் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி நீங்கள் ஒரு திட்டம் போட்டு வைக்க வேண்டும். முடிந்தவரை பயனுள்ள வகையில் நேரத்தை செலவழிக்க நீங்கள் திட்டமிட வேண்டும்.
புத்தகங்கள் படிப்பது நமது மூளையை சுருசுறுப்பாக இயங்க வைப்பதோடு, உங்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது மற்றும் மொழித்திறனை அதிகரிக்க உதவுகிறது. நீங்கள் சோர்வாக உணரும்போது எதாவது ஒரு புத்தகத்தை ஐந்து படிக்கலாம், அது உங்களை மகிழ்ச்சியான மனநிலைக்கு கொண்டு செல்லும்.
வீட்டிலேயே நேரத்தை செல்வத்திடம் நண்பர்களுடன் வெளியில் செல்வது, சுற்றத்தினருடன் பேசுவது போன்று சமூகத்துடன் ஒன்றிணைவது உங்கள் மனநிலையை ஆரோக்கியமாக்குகிறது. சமூகத்தில் நாம் கலக்கும்போது தான் நமக்கு பல விஷயங்கள் தெளிவாகும்.
உடல் வலிமை இந்த வயதில் மிக முக்கியம், நேரம் கிடைக்கும்போது மட்டும் உடற்பயிற்சி செய்யாமல் தினமும் உடற்பயிற்சிக்கென்றே 30 நிமிடங்கள் ஒதுக்க வேண்டும். தினசரி இப்படி செய்யும்போது உங்கள் உடலுக்கும், மனதுக்கும் புத்துணர்ச்சி கிடைக்கும்.
நீண்ட தூர பயணம் பலருக்கும் மகிழ்ச்சியை தரும், அடிக்கடி நீங்கள் இதுபோன்ற பயணங்களை மேற்கொள்ளலாம். வாகனங்களில் தான் பயணம் செய்யவேண்டும் என்பதில்லை நடைபயணம் செய்வதும் மிக சிறந்த பலனை தரும்.