சூரியனின் மாற்றத்தால் ஜூலையில் ஜொலிக்கப்போகும் ராசிகள் இவைதான்: உங்க ராசியும் இதுவா?

Sun Transit: பஞ்சாங்க கணிப்புகளின் படி, சூரிய பகவான் 16 ஜூலை 2022 அன்று தனது ராசியை மாற்றுவார். சூரியன் மிதுன ராசியை விட்டு நீங்கி கடக ராசியில் நுழைவார். சூரியனின் ராசி மாற்றம் 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனினும், இந்த மாற்றத்தால் சில ராசிகளுக்கு அதிக அளவிலான பலன்கள் கிடைக்கும். ஜூலை 16 ஆம் தேதி சூரியனின் ராசி மாற்றம் மூன்று ராசிகளின் அதிர்ஷ்டத்தை பிரகாசமாக்கும். 

1 /4

கடகத்தில் சூரியனின் சஞ்சாரம் மேஷ ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்களை அளிக்கும். இந்த நேரத்தில் கடக ராசிக்காரர்களுக்கு பதவி உயர்வும் கிடைக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. புதிய வேலை வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள மேஷ ராசிக்கார்ரகளுக்கு இது லாபகரமான நெரமாக இருக்கும். 

2 /4

கடகத்தில் சூரியனின் சஞ்சாரம் ரிஷப ராசிக்காரர்களின் வாழ்வில் மகிழ்ச்சியைத் தரும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வருமானத்துடன் கூடிய வேலை கிடைக்கும். சில ரிஷப ராசிக்காரர்களுக்கு வேலையில் இடமாற்றம் ஏற்படலாம். இந்த மாற்றத்தால் அனுகூலமாக பலன்களை பெறுவீர்கள்.   

3 /4

சூரியனின் ராசி மாற்றம் மிதுன ராசிக்காரர்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். இந்த ராசியைச் சேர்ந்தவர்கள் ஜூலை மாதத்தில் பெரிய லாபம் பெறலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு ஊதிய உயர்வு ஆகியவை கிடைக்கும். செல்வம் சேரும் வாய்ப்புகள் உண்டாகும். நீண்ட நாட்களாக சிக்கிய பணம் திரும்ப கிடைக்கும். இந்த நேரம் முதலீட்டுக்கு சாதகமாக இருக்கும்.

4 /4

ஜூலை மாதம் கிரகங்களின் ராசி மாற்றத்தின் அடிப்படையில் விசேஷமாக கருதப்படுகின்றது. இந்த வாரத்தில் சூரிய பகவான் கடக ராசிக்குள் நுழைகிறார். ஜூலை 16 இரவு, சூரியன் கடக ராசிக்குள் நுழைகிறார்.  (பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)