Shani Transit 2023: சனியின் ராசி மாற்றம் எந்த ராசிகக்கு அதிர்ஷ்டம்

வருகிற ஜனவரி 17 ஆம் தேதி 2023 அன்று, சனி பகவான் மகர ராசியில் இருந்து கும்பம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். இதன் போது எந்த ராசிகளுக்கு இந்த பெயர்ச்சியின் நல்ல பலன் கிடைக்கும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.

1 /4

மேஷ ராசி - சனிபகவானின் அருளால் இனி சொந்த வேலையைத் தொடங்குவீர்கள். தந்தையின் உதவியைப் பெறுவீர்கள், அதிர்ஷ்டம் உங்களுடன் இருக்கும். குழந்தையின் தரப்பிலிருந்து நல்ல ஆதரவைப் பெறுவீர்கள். சனிபகவானின் அருளால் அமானுஷ்ய விஞ்ஞானத்தில் ஆர்வம் கூடும். நீங்கள் மர்மங்களின் உலகத்தை நோக்கி ஈர்க்கப்படலாம்.  

2 /4

ரிஷப ராசி - ரிஷபம் ராசிக்காரர்களின் தலைவிதி மாறப்போகிறது. பல ஆண்டுகளாக கட்டிடம் கட்ட வேண்டும் என்ற கனவில் இருந்த மக்களின் கனவும் இனி நிறைவேறும். எண்ணெய், சுரங்கம், அரசியல், தத்துவம், மதம் மற்றும் ஜோதிடம் ஆகியவற்றுடன் தொடர்புடையவர்கள் இப்போது முன்னேறுவார்கள்.

3 /4

கன்னி ராசி - சனிபகவானின் அருளால் கன்னி ராசிக்காரர்களுக்கு வேலையில் முன்னேற்றம் ஏற்படும். பெரிய நிறுவனத்தில் வேலை வாய்ப்பும் கூடும். வெளிநாடு செல்லும் கனவு நிறைவேறும். அயல்நாடுகளுடன் வணிக உறவுகள் தொடங்கும். இந்த நேரத்தில், அரசியலுடன் தொடர்புடையவர்கள் தங்கள் உழைப்பின் பலனைப் பெறுவார்கள்.  

4 /4

தனுசு ராசி - உங்கள் தைரியமும் வலிமையும் அதிகரிக்கும். இந்தப் பெயர்ச்சியின் விளைவாக வெளிநாட்டிலிருந்து உங்களுக்குப் பணம் கிடைக்கும். அரசு வேலையில் வெற்றி காண்பீர்கள்.