Migraine: ஒற்றை தலைவலியை உடனே விரட்டும் ‘5’ சூப்பர் உணவுகள்..!!

ஒற்றைத் தலைவலி என்பது பெரும்பாலான மக்கள் சந்திக்கும் ஒரு பிரச்சனை. ஒற்றைத் தலைவலி மிக அதிகம் இருக்கும் போது, சில சமயங்களில் வாந்தியும் ஏற்படும். ஒலி மற்றும் வெளிச்சத்தை கூட சகித்துக் கொள்ள முடியாமல் இருக்கும். ஒற்றை தலைவலியை போக்க உதவும் சில உணவுகள் குறித்து மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர். மெக்னீசியம் சத்து அதிகமாக உள்ள உணவுகள், சரியான நேரத்தில் எடுத்துக் கொள்ளும் மருந்து மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை மூலம் ஒற்றைத் தலைவலி பிரச்சனையை பெருமளவில் கட்டுப்படுத்தலாம் என்கின்றனர்.

1 /5

ஆளி விதைகள், சியா விதைகள் மற்றும் முந்திரி போன்றவை மெக்னீசியம் நிறைந்தவை. மெக்னீசியம் நிறைந்த உணவு ஒற்றைத் தலைவலியைக் குறைக்க உதவுகிறது என நம்பப்படுகிறது. இவற்றை உங்கள் தினசரி உணவில் சேர்த்துக் கொண்டால், ஒற்றைத் தலைவலி பிரச்சனை படிப்படியாக குறையும்.

2 /5

உடலுக்கு நீர்சத்து கொடுக்கும் எதுவும் ஒற்றைத் தலைவலி வலியிலிருந்து நிவாரணம் அளிக்கும். பல்வேறு வகையான மூலிகை தேநீர் சுவையில் நன்றாக இருப்பதோடு மட்டுமல்லாமல், பல நன்மை பயக்கும் பண்புகளையும் கொண்டுள்ளது. உதாரணமாக, புதினா இலை சேர்த்த தேநீர் சைனஸ் அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது, இது தலைவலியையும் குறைக்கிறது.

3 /5

உங்கள் உடல் அனைத்து ஊட்டச்சத்துக்களையும் பழங்கள் மற்றும் காய்கறிகள் மூலம் பெறுகிறது. இதன் மூலம், உங்கள் செல்கள் எந்த விதமான நோய் மற்றும் வலியையும் எதிர்த்துப் போராட முடியும்.

4 /5

பல நேரங்களில் ஒற்றைத் தலைவலி, வயிறு தொடர்பான பிரச்சனைகளால் ஏற்படுகிறது. தயிர் வயிற்றுப் பிரச்சினைகளை நீக்குகிறது. இது நீரிழப்பைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.

5 /5

கடல் மீனில் போதுமான அளவு ஒமேகா 3 உள்ளது, இது உடலில் வீக்கத்தை குறைக்க உதவுகிறது. கடல் உணவில், குறிப்பாக மீன் உணவில் புரதம் மற்றும் நல்ல கொழுப்பு நிறைந்துள்ளது. இது ஒற்றை தலைவலியைக் குறைக்கிறது.