வடகொரியாவால் பரிசோதிக்கப்பட்ட ICBM! திரவ எரிபொருள் ஏவுகணை! அதிர்ச்சியூட்டும் விவரங்கள்

தடை செய்யப்பட்ட அணுஆயுத ஏவுகணைகள் பரிசோதனையை வட கொரியா கைவிட வேண்டும் என்று அமெரிக்கா, ஜப்பான், இங்கிலாந்து, பிரான்ஸ், அயர்லாந்து, அல்பேனியா ஆகிய 5 நாடுகள் அறிக்கை மூலம் வேறு கோரிக்கை விடுத்திருந்தன. 

இந்த நிலையில் வடகொரியாவின் ICBM ஏவுகணை சோதனையில் திரவ எரிபொருளை பயன்படுத்தி சர்வதேச நாடுகளிடையே கவலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

(Photographs:AFP)

1 /6

உலகிலேயே முதன்முறையாக சாலை-மொபைல் லாஞ்சரில் இருந்து திரவ எரிபொருளை பயன்படுத்தி மிகப்பெரிய ஏவுதலை நிகழ்த்தியுள்ளது வடகொரியா

2 /6

கொரிய தீபகற்பத்திலும் அதைச் சுற்றியும் ராணுவப் பதட்டங்கள் அதிகரித்து வருவதால், அணுவாயுதப் போரின் ஆபத்துடன் அமெரிக்க ஏகாதிபத்தியங்களுடன் நீண்டகால மோதல்கள் நிச்சயிக்கப்படுவதாக  KNCA தெரிவித்துள்ளது.

3 /6

நாட்டின் மூலோபாய சக்திகளின் நவீன அம்சம் குறித்து உலகை நம்பவைக்க இந்த சோதனை உதவும் என்று நாட்டின் உச்சத் தலைவர் கிம் ஜாங் உன் இந்த ஏவுகணை சோதனையை செய்ததாக வடகொரியாவின் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

4 /6

உலகின் மிகப்பெரிய கண்டம்விட்டு கண்டம்பாயும் ஏவுகணை சோதனையில் திரவ எரிபொருளைக் கொண்டு வடகொரியா நடத்தி இருக்கிறது. இது ‘மான்ஸ்டர் ஏவுகணை’ என அழைக்கப்படுகிறது. 

5 /6

Hwasong-17 எனப்படும் உலகின் மாபெரும் கண்டம் விட்டு கண்டம் பாயும் இந்த ஏவுகணை அக்டோபர் 2020ம் ஆண்டு வெளியிடப்பட்டு, வடகொரிய ராணுவ அணிவகுப்பிலும் இடம்பெற்றது

6 /6

Hwasong-17 அமெரிக்காவில் எந்த இடத்தையும் அடையும் பொருட்டு மிகத்துல்லியமாக தாக்கும் அளவுக்கு திறன் படைத்தது