கில்லியாக சொல்லியடிப்பாரா கில்... ஏலத்தில் குஜராத்தின் பிளான் என்ன?

IPL Auction 2024: ஐபிஎல் மினி ஏலம் வரும் டிச. 19ஆம் தேதி துபாயில் நடைபெற உள்ள நிலையில், அதில் கடந்த சீசனில் இரண்டாமிடம் பிடித்த குஜராத் அணியின் பிளான் என்ன என்பதை இதில் காணலாம். 

 

 

 

 

 

 

1 /7

குஜராத் அணி 2022ஆம் ஆண்டு அறிமுகமான சீசனிலேயே சாம்பியன் பட்டத்தை வென்றது. 2023ஆம் ஆண்டு இறுதிப்போட்டியில் சிஎஸ்கேவிடம் தோல்வியை கண்டது.   

2 /7

குஜராத் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணி டிரேட் செய்த நிலையில், சுப்மான் கில் கேப்டனாக நியமிகப்பட்டுள்ளார். 

3 /7

தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: சுப்மான் கில், விருத்திமான் சாஹா, விஜய் சங்கர், ரஷித் கான், முகமது ஷமி, அபினவ் சதராங்கனி, சாய் சுதர்சன், தர்ஷன் நல்கண்டே, டேவிட் மில்லர், ஜெயந்த் யாதவ், ஜோஷ்வா லிட்டில், கேன் வில்லியம்சன், மேத்யூ வேட், மோஹித் சர்மா, நூர் அகமது, சாய் கிஷோர், ராகுல் தெவாடியா

4 /7

விடுவிக்கப்பட்ட வீரர்கள்: ஹர்திக் பாண்டியா (டிரேடிங்), யாஷ் தயாள், கேஎஸ் பாரத், சிவம் மாவி, உர்வில் படேல், பிரதீப் சங்வான், ஒடியன் ஸ்மித், அல்சாரி ஜோசப், தசுன் ஷனகா

5 /7

தேவையான வீரர்கள்: மொத்தம் 2 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 8 பேர் குஜராத் அணிக்கு தேவை எனலாம். 

6 /7

கையில் இருக்கும் தொகை: ரூ.38.15 கோடி தொகையை குஜராத் டைட்டன்ஸ் வைத்துள்ளது. 

7 /7

ரச்சின் ரவீந்திரா, ஸ்டார்க், கம்மின்ஸ் உள்ளிட்ட வீரர்களை ஏலத்தில் எடுக்க வாய்ப்புள்ளது.