புத்தாண்டில் கிரக பெயர்ச்சிகள்: 2025 ஜனவரியில்... இந்த 3 ராசிகளுக்கு லக்கு மேல லக்கு!

January 2025 Planets Transit: வரும் ஜனவரியில் புதன், சூரியன், செவ்வாய், வெள்ளி ஆகிய நான்கு கிரகங்கள் பெயர்ச்சி அடைய உள்ள, அந்த மாதத்தில் இந்த மூன்று ராசிக்காரர்கள்தான் அதிக அதிர்ஷ்டத்தை அனுபவிக்க உள்ளனர்.

2025ஆம் ஆண்டு ஜன. 4ஆம் தேதி முதல் ஜன. 28ஆம் தேதி வரை  புதன், சூரியன், செவ்வாய், வெள்ளி ஆகிய நான்கு கிரகங்கள் வெவ்வேறு ராசிகளுக்கு பெயர்ச்சி அடைய உள்ளன.

1 /8

2025ஆம் ஆண்டு ஜனவரியில் மொத்தம் நான்கு கிரகங்கள் வெவ்வேறு ராசிகளில் பெயர்ச்சி அடைய உள்ளன. இதனால் 12 ராசிக்காரர்களின் வாழ்விலும் தாக்கம் உண்டாகும். 

2 /8

வரும் ஜன.4 ஆம் தேதி புதன் கிரகம் தனுசு ராசியில் நுழைவதால் புதாதித்ய ராஜயோகம் உருவாகும். ஜன.14ஆம் தேதி சூரிய பகவான் பெயர்ச்சி அடைகிறார். தொடர்ந்து, ஜன.21ஆம் தேதி செவ்வாய் கிரகம் மிதுன ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். 

3 /8

தொடர்ந்து ஜன. 24ஆம் தேதி புதன் கிரகம் மகர ராசிக்குள் நுழைய உள்ளது அப்போதும் தாதித்ய ராஜயோகம் உருவாகும். சுக்கிரன் வரும் ஜன.28ஆம் தேதி மீன ராசிக்குள் நுழைவார். 

4 /8

புதன், சூரியன், செவ்வாய், வெள்ளி ஆகிய நான்கு கிரகங்கள் பெயர்ச்சி அடைய உள்ள நிலையில், ஜனவரியில் இந்த 3 ராசிகள்தான் அதிக பலன்களை பெற உள்ளன. அந்த மூன்று ராசிகள் குறித்து இங்கு விரிவாக காணலாம். 

5 /8

மேஷம் (Aries): வரும் ஜனவரியில் நடைபெற உள்ள 4 கிரகங்களின் பெயர்ச்சியால் இந்த ராசிக்காரர்கள் அதிக அதிர்ஷ்டக்காரர்கள் ஆவர். ஜனவரியில் புது வகையில் வருமானம் வரும், பொருளாதாரம் மேம்படும். புதிய விஷயங்களில் நீங்கள் முதலீடு செய்யலாம். PF அல்லது காப்பீடு பணம் கிடைக்கும். கார் வாங்கும் வாய்ப்பும் ஏற்படும்.

6 /8

துலாம் (Libra): ஜனவரில் இவர்களுக்கு லக்கோ லக்கு... நீண்ட நாள்களாக இருந்த பிரச்னைகள் தீரும். பொருளாதார பிரச்னை குறையும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் ஆகும். பழைய முதலீடுகளில் இருந்து பண பலன் கிடைக்கும். நிறைவுபெறாத வேலைகள் நிறைவுபெறும். 

7 /8

மகரம் (Capricon): இந்த ராசிக்காரர்களுக்கும் ஜனவரி அதிக அதிர்ஷ்டம் தரும். திருமணமானவர்களின் வாழ்க்கை சிறக்கும். குடும்பத்தினருடன் நீங்கள் சுற்றுலா செல்வீர்கள். குடும்பச் சொத்து மூலம் பலன் கிடைக்கும். உங்கள் வணிகத்தை விரிவுப்படுத்த இதுதான் நல்ல காலம். வேலையில் பதவி உயர்வு கிடைக்கும். 

8 /8

பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான மற்றும் ஜோதிட கணிப்புகளின் அடிப்படையில் எழுதப்பட்டது. இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை.