ஓட்டப்பந்தய களத்தில் துரத்தப்பட்ட உசைன் போல்ட் ஒலிம்பிக்கில் வெற்றி பெற்றது எப்படி?

Usain Bolt : ஓட்டப்பந்தய மாவீரன் உசைன் போல்ட் 2011 ஆம் ஆண்டு உலக சாம்பியன்ஷிப் ஓட்டப்பந்தயத்தில் தகுதியிழப்பு செய்யப்பட்ட நிலையில், அடுத்த ஆண்டே 100 மீட்டர் பிரிவில் சாதித்தார். எப்படி?

Usain Bolt : உசைன் போல்ட் வெற்றிகள் மட்டுமல்ல, அவரின் தோல்விகளும் எல்லோருக்கும் உத்வேகத்தை கொடுக்கக்கூடியவை. அந்தவகையில் தோல்வியில் இருந்து உசைன் போல்ட் மீண்டது எப்படி என்பதற்கான இந்த ஒரு சம்பவம், நீங்களும் தோல்வியில் இருந்து மீள்வதற்கு உதவியாக இருக்கும்.

 

1 /9

ஓட்டப்பந்தய உலகின் மாவீரன் என்றால் இப்போது இருக்கும் குழந்தைகள் கூட கண்ணை மூடிக்கொண்டு உசைன் போல்ட் என கூறிவிடும். அந்தளவுக்கு அவர் ஓட்டப்பந்தயத்தில் சாதிக்காத சாதனைகளே மிச்சம் இல்லை.

2 /9

உசைன் போல்ட் செய்திருக்கும் உலக சாதனைகளை இனியொருவர் முறியடிப்பாரா? என்பது கூட சந்தேகம் தான். அந்தளவுக்கு கற்பனைக்கு எட்ட முடியாத வேகத்தில் ஓடி பல சாதனைகளை படைத்திருக்கிறார். ஆனால், அப்பேர்பட்ட வெற்றிகளை பெற உசைன் போல்டும் சில தோல்விகளையும் அவமானங்களையும் சந்திக்க வேண்டியிருந்தது. 

3 /9

அவரின் இந்த தோல்விகளும், அவமானங்களும் தான் போல்டின் அடுத்தடுத்த மகத்தான வெற்றிக்கு உந்துசக்தியாகவும் இருந்தது என்றால் மிகையல்ல. அந்தவகையில் உசைன்போல்ட் ஒருமுறை ஓட்டப்பந்தயத்தில் தகுதியிழப்பு ஆகி அடுத்த ஆண்டே அதே பிரிவில் சாதித்தது தான் மிகவும் சுவாரஸ்யமான கதை. 

4 /9

2008 ஆம் ஆண்டு ஒலிம்பிக் களத்தில் ஓட்டப்பந்தயத்துக்கு களமிறங்கிய உசைன் போல்ட் 100 மீட்டர் பிரிவில் உலக சாதனையுடன் தங்கப்பதக்கம் வெல்கிறார். அடுத்த ஆண்டு 2009ல் நடைபெறும் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 100 மீட்டர் தொலைவை வெறும் 9.58 நொடிகளில் கடந்து சரித்திர சாதனையை படைக்கிறார்.

5 /9

இந்த சாதனைக்குப் பிறகு, இதற்கு மேல் ஒரு வினாடி முன்னால் ஓடி இன்னொருவர் இந்த சாதனையை முறியடிக்க வாய்ப்பே இல்லை என மருத்துவ உலகமே தெரிவித்தது. அப்படியொரு மகத்தான சாதனையை படைத்த உசைன் போல்ட் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் தடகள போட்டியில் 100 மீட்டர் பிரிவில் தகுதியிழப்பு ஆகிறார்.

6 /9

விசில் அடிப்பதற்கு முன்பாகவே ஓட ஆரம்பித்ததால் அந்த தொடரில் தங்கப்பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்துவிடுகிறார். இது அவருக்கு பெரும் அவமானமாகிவிடுகிறது. மிகவும் நொந்துபோய் கண்கலங்கிய உசைன்போல்ட் அத்துடன் சோர்ந்துவிடவில்லை. தொடர்ந்து தீவிர பயிற்சி செய்கிறார். 

7 /9

2012 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் தடகள போட்டியில் கலந்து கொள்கிறார். அதே 100 மீட்டர் பிரிவில் 9.63 விநாடிகளில் கடந்து மீண்டும் ஒரு உலக சாதனை படைத்து தங்கப்பதக்கம் வெல்கிறார். 2011 ஆம் ஆண்டு தகுதியிழப்பு ஆனதை அவமானமாக நினைத்த அவர் இந்த வெற்றியின் மூலம் பிராய்ச்சித்தம் தேடிக் கொண்டு மனமகிழ்ச்சி அடைகிறார். 

8 /9

இந்த விஷயத்தை தான் உசைன் போல்டிடம் இருந்து பலரும் கற்றுக் கொள்ள வேண்டும். தோல்வியை சந்திக்கும்போது அவர் சோர்ந்துவிடவில்லை. மாறாக முன்பு உழைத்ததைவிட இரு மடங்கு உழைகிறார். அதனால் வெற்றியும் இருமடங்கு வேகத்தில் அவரை தேடி வந்தது. 

9 /9

நீங்களும் ஏதேனும் ஒரு விஷயத்தில் தோல்வியை சந்தித்தால் மனம் சோர்ந்து விடாமல் முன்பு உழைத்ததைவிட இருமடங்கு உழைப்பை செலுத்தி முயற்சி செய்யுங்கள். நிச்சயம் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். உங்கள் வாழ்க்கையும் பிறருக்கு எடுத்துக்காட்டாகும்.