Relationship Tips Tamil : ஒருதலை காதலை இருதலை காதலாக மாற்றுவது எப்படி? இதோ சில ஈசியான டிப்ஸை படிங்க..
Relationship Tips Tamil : பலர், “ஒரு செடியில் ஒரு பூ..” என்ற டைலாக்கை பேசிக்கொண்டு, தங்களுக்கு பிடித்தவரை ஒருதலையாக காதலித்துக்கொண்டிருப்பர். காதலை மனதில் வைத்துக்கொண்டு பிடித்தவரிடம் எப்படி சொல்ல வேண்டும் என்று தெரியாமல் தவித்து கொண்டிருப்பர். கடைசியில், அந்த காதலை அவரிடம் சொல்லி, அது ஒரு நல்ல ரிலேஷன்ஷிப்பாகவும் செல்லலாம், அல்லது அந்த காதல் இறுதிவரை சம்பந்தப்பட்ட நபருக்கு தெரியாமல் போய்விடலாம். இதனால் அந்த காதலித்த நபருக்கு மனம் உடைந்து போகலாம், இதை தவிர்க்க காதலை உரியவரிடம் தெரிவிப்பது நல்லது. இந்த ஒரு தலை காதலை, இருதலை காதலாக மாற்றுவது எப்படி? இதோ டிப்ஸ்!
ஒருதலை காதலை, ஆங்கிலத்தில் unrequited love என்று கூறுவர். இந்த ஒருதலை காதலில் பலர் விழுவதுண்டு, ஆனால் எழுவார்களா என்பதுதான் சந்தேகம். இப்படி ஒருதலை காதலில் விழுபவர்கள் இது காதலா இல்லையா என்பதே தெரியாமல் மிகவும் அவஸ்தைப்படுவர். ஒரு சில முறை, இந்த ஒரு தலை காதல், இருவரும் சம்பந்தப்பட்ட காதல் உறவாகவும் மாறலாம், அல்லது அது தோல்வியிலும் முடியலாம். இந்த ஒருதலை காதலை எப்படி வர்க்-அவுட் ஆக வைக்க வேண்டும்? இதோ டிப்ஸ்
உங்களுக்கு ஒருவரை பிடித்திருக்கிறது என்றால், நீங்கள் அவரை பற்றி நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள் என்பதை தெரியப்படுத்துங்கள். அதனால் ஒரு நாளில் அவர்களை எந்த விஷயம் உங்களை நினைவு படுத்திகிறதோ, அதை அனுப்பி “இது உங்களை நியாபக்கப்படுத்தியது” என்று கூறுங்கள்.
அவர்களை உங்களுக்கு பிடிக்க வைக்க வேண்டும் என்பதற்கான செயல்களை செய்வதை விட, அவர்களுக்கு முதலில் நல்ல நண்பராக இருக்க முயற்சி செய்யுங்கள். அது மட்டுமன்றி, இருவருக்குள்ளும் இருக்கும் புரிதலும் அதிகரிக்கும்.
உங்களுக்கு பிடித்தவருடன் இருக்கும் போது, நீங்கள் உங்களுடைய சுயத்தை தவறாமல் இருக்க வேண்டியது மிகவும் முக்கியமாகும். உங்களுடைய பெஸ்ட் வர்ஷனாக அவர்களுடன் இருக்கும் போது, அவர்களுக்கு நீங்கள் அவர் அருகில் இல்லாத சமயத்தில் உங்களின் அருமை புரியும். இதனால் நீங்கள் இருவரும் ஒரு காதல் ரிலேஷன்ஷிப்பை கூட வளர்த்துக்கொள்ளலாம்.
உங்களுக்கு பிடித்தவர்கள் என்ன செய்கிறார்கள், எங்கு இருக்கிறார்கள் என்று சமூக வலைதளங்களில் போய் ஸ்டாக் செய்யாதீர்கள். இது, ஆரோக்கியமற்ற செயலாகும்.
அவர்களுக்கு எந்த நேரத்தில் எமோஷனல் சப்போர்ட் தேவைப்பட்டாலும் அவருக்கு உறுதுணையாக இருக்கும் நபராக இருங்கள். உங்களின் ஆதரவினால் அவரது மனம் மாறவும் செய்யலாம்.
ஒரு கட்டத்தில் உங்களுக்கு பிடித்த நபரிடம் உங்கள் மனதில் இருப்பதை சொல்லும் கட்டாயம் வரலாம். அப்படி நீங்கள் சொல்லும் போது, அதை அவர் அதை நிராகரித்தாலும், ஏற்றுக்கொண்டாலும் அந்த முடிவை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர் நோ சொல்லி விட்டால் அது நோதான் என்பதை புரிந்து கொண்டு, அவருடைய உணர்வுக்கு மரியாதை கொடுப்பது நல்லது.