குண்டாக இருந்தாலும் பிடித்த உடையில் ஒல்லியா தெரியனுமா? ‘இதை’ பண்ணுங்க!

Dressing Style Tips: பலருக்கு குண்டாக இருக்கிறோமே என்ற பயத்தினாலேயே பல உடைகளை உடுத்த தயங்குவர். அப்படி, பயந்து பயந்து சில உடைகளை உடுத்தாமல் அப்படியே விடுத்திருப்பர். அது போன்ற பயம் கொண்டவராக நீங்கள் இருந்தால், இது உங்களுக்கான பதிவு!

1 /8

குண்டாக இருக்கும் பலர் தங்கள் உடல் மீது கொண்ட தவறான புரிதலால் பல உடைகளை போடாமலேயே வைத்திருப்பர். இன்னும் சிலர், தன்னம்பிக்கை குறைவாகவே காணப்படுவர். அவர்கள், தங்களுக்கு பிடித்த உடைகளை பிடித்தார் போல அணிய என்ன செய்ய வேண்டும்? இங்கு சில டிப்ஸ்களை பார்க்கலாம். 

2 /8

எப்போதும் எந்த ஆடை எடுத்தாலும் அதில் v வடிவம் உள்ள ஆடைகளாக தேர்ந்தெடுத்து எடுக்கவும். இது உங்களது தோள்பட்டை, இடுப்பு, கழுத்து ஆகிய பகுதிகளை பெரிதாக காண்பிக்காது. அதனால் இது போன்ற உடைகளை அணிகையில் நீங்கள் பெரிதாக தெரிய மாட்டீர்கள். 

3 /8

ஒரே நிற ஆடையை பயன்படுத்துவது ஒரு தனி ஸ்டைல். உதாரணத்திற்கு, நீங்கள் டாப்பும் கருப்பு கீழே அணியும் கால்சட்டையும் கருப்பாக அணிந்திருந்தால் அது ஒரு தனி ஸ்டைலாக இருக்கும். இதனால் உங்கள் இடுப்பு மற்றும் வயிற்று பகுதியில் இருக்கும் சதை வெளியில் தெரியாது. இதற்கு சரியான அளவு ஆடிகளை உபயோகிப்பது நன்று. 

4 /8

முழு நீள கவுனையும் நீங்கள் வெளியில் செல்லும் போது அணிந்து செல்லலாம். இதனால் உங்கள் உடல் பெரிதாக தெரிவதில் இருந்து தப்பலாம். இப்படி ஆடை அணிகையில் உள்ளே ஸ்லிம் ஃபிட் உள்ளாடையை அணியவும். 

5 /8

உங்கள் எடை பெரிதாக தெரியாமல் இருக்க, உங்களது நீளத்தை கொஞ்சம் உயர்த்தி காண்பிக்க வேண்டும். உங்களுக்கு ஏற்ற ஆடைகளை அணிகையில் ஹை ஹீல்ஸ் அல்லது சாதாரண ஹீல்ஸ் வைத்த காலணிகளை அணியலாம். 

6 /8

உள்ளே டி-ஷர்ட் அல்லது கட் ஷர்ட் அணிந்திருக்கிறீர்கள் என்றால், மேலே ஒரு ஓவர் கோட் அல்லது ஜாக்கெட்டை அணியலாம். இது உங்களை மாஸாக காண்பிப்பது மட்டுமன்றி, உடல் பெரிதாக தெரியாமல் தடுக்கும். 

7 /8

நீங்கள் உடுத்தும் உடைகளின் நிறமும் உங்களை எப்படி காண்பிக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும். ஊதா, கருப்பு, சாம்பல் போன்றவை உங்கள் உடலை பெரிதாக காண்பிக்காது. ஆனால் அதுவே சிகப்பு, மஞ்சள் போன்ற அடிக்கும் நிறம் கொண்ட ஆடைகள், உங்கள் தோற்றத்தை தனியாக காண்பிக்கும். 

8 /8

மிகவும் இறுக்கமாக இருக்கும் ஆடைகளை அணிவதை தவிர்க்கவும். இவை உங்களை அசௌகரியமாக உணர செய்வதுடன், உங்கள் சதைகளை பெரிதாக காண்பிக்கும். அதே நேரத்தில் மிகவும் தொள தொள ஆடைகளையும் அணிய வேண்டாம். உங்கள் உடலமைப்புக்கு ஏற்றவாறு ஆடையை ஃபிட்டாக தேர்ந்தெடுக்கவும்.