How To Handle Negativity Like PM Narendra Modi : இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இன்று தனது 74வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையடுத்து, நம்மை சுற்றி இருக்கும் நெகட்டிவிட்டியை எப்படி கையாள்வது என்பதை இங்கு பார்ப்போமா?
How To Handle Negativity Like PM Narendra Modi : கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக, இந்தியாவின் பிரதமராக விளங்குபவர் நரேந்திர மோடி. இவருக்கு இன்று 74வது பிறந்தநாள். எந்த மாநிலத்தில் எப்படியோ தமிழகத்தில் அவருக்கு ஆதரவு குறைவுதான். அது மட்டுமல்ல, அரசியல் பிரபலமாக இருந்தாலும் சரி திரை பிரபலமாக இருந்தாலும் சரி, அவர்கள் மீது எப்போதும் மக்களின் கவனம் இருந்துக்கொண்டே இருக்கும். இதனால், அவர்களை சுற்றி எந்த அளவிற்கு ஆதரவு கொடுப்பவர்கள் இருக்கிறார்களோ, அதை விட அதிகமாக நெகடிவ்விட்டியை பரப்புபவர்களும் இருப்பார்கள். நம் வாழ்விலும் அதிகமான நெகடிவிட்டி வரலாம். அதை, மோடியை போல் எப்படி கையாள வேண்டும் தெரியுமா?
இலக்குகளில் கவனம் செலுத்துவது: மோடி, தனது பாதையில் தெளிவாக இருப்பதால் அதில் கவனமாகவும் நெடுநாட்கள் வலிமையை கொண்டவர்களாகவும் இருக்கிறார். நெகடிவிட்டியை எதிர்கொள்கையில், நீண்ட கால நோக்கங்களை மனதில் வைத்து செயல்பட வேண்டும்.
உணர்ச்சிகளை கட்டுப்படுத்துதல்: மோடி, தன்னை நோக்கி வரும் விமர்சனங்களை மிகவும் அமைதியாக எதிர்கொள்வார் என கூறப்படுகிறது. நமது உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி, நம்மை பற்றி யார் என்ன சொன்னாலும் அதை ஒரே முகத்துடன் எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஆக்கப்பூர்வ பதில்: மோடி, தன்னை பற்றிய விமர்சனங்களுக்கு ஆக்கப்பூர்வமான பதில்களை கொடுப்பார். இவர் வழங்கும் தீர்வுகளை வழங்குவார்.
வலுவான டீம்: மோடி, தனக்கு கீழ் வலுவான டீமை வைத்திருக்கிறார். அது, நண்பர்கள் ஆகட்டும், உறவினர்கள் ஆகட்டும், உடன் வேலை பார்ப்பவர்கள் ஆகட்டும். யாராக இருந்தாலும், அவர்களிடம் தனது கருத்துகளை கூறி அதற்கான விமர்சனங்களையும் பெற்றுக்கொள்வார்.
சுய முன்னேற்றம்: விமர்சனங்களை ஒருவரை வளர்த்து விடலாம். இவை, பல விஷயங்களை கற்றுக்கொள்வதற்கும் வழிவகுக்கும். இதை பின்பற்றும் மோடி, தன்னை இதன் மூலம் முன்னேற்றிக்கொள்கிறார். தன்னை பற்றி நெகடிவாக வரும் விமர்சனங்களை, எந்த ஏரியாவில் முன்னேற்ற வேண்டும் என்பதை நோக்கி அவர் அடுத்த அடியை எடுத்து வைப்பார்.
நேர்மறையான விளைவுகள்: மோடி, மோடி அடிக்கடி நேர்மறையான சாதனைகள் மற்றும் முன்னேற்றங்களை முன்னிலைப்படுத்துகிறார். இது, நெகட்டிவிட்டியில் நமது கவனத்தை அதிகரிப்பதை தவிர பாசிடிவான மாறுதல்களை லிஸ்ட் போட வேண்டும்.
மோடி, தான் கூற வரும் விஷயங்களை தெளிவாக பேசுவார். அவரை போலவே, உங்களது பார்வை மற்றும் நடத்தைகளையும் தெளிவாக
மீண்டு வரும் மன உறுதி: மோடி, எந்த பிரச்சனை வந்தாலும் அதிலிருந்து மீண்டு எழும் மன உறுதியுடன் இருப்பார். எந்த சிக்கல், சவால் வந்தாலும் அதை எதிர்த்து போராடும் குணம் படைத்தவர். இதை நாமும் வளர்த்துக்கொண்டால், நெகடிவிட்டியை சூப்பராக கையாளலாம்.