பத்தே நிமிடத்தில் ஆழ்ந்த தூக்கம் வேண்டுமா... ‘இதை’ செய்யுங்க...!

தூங்குவதில் சிரமம் உள்ளதா... தூக்கமின்மை பிரச்சனை உள்ளதா... வெறும் 10 நிமிடங்களில் ஒரு நல்ல இரவு தூக்கத்தை அனுபவிக்க நீங்கள் செய்ய வேண்டியதை அறிந்து கொள்ளலாம்.

நவீன வாழ்க்கை முறையில், பலர் தூக்கமின்மையுடன் போராடுகிறார்கள். மன அழுத்தம், பதட்டம் அல்லது அதிக நேரம் மொபைல், கணிணியை பார்த்துக் கொண்டிருப்பது ஆகியவை தூக்கமின்மைக்கான முக்கிய காரணம்.

1 /7

இந்தியாவில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 80 சதவீதம் பேர் தற்போது தூக்கமின்மை பிரச்சினையை எதிர்கொள்கின்றனர் என தரவுகள் கூறுகின்றன. உணவுப்பழக்கம், மன அழுத்தம் உள்ளிட்ட பல வாழ்க்கை முறை பழக்கங்களின் விளைவாக  இது இருக்கலாம். இந்த கட்டுரையில், வெறும் 10 நிமிடங்களில் தூங்குவதற்கான ரகசிய மந்திரத்தை அறிந்து கொள்ளலாம்.

2 /7

உங்கள் இரவு நேர வழக்கத்தில் கெமோமில் தேநீரை சுவைப்பது, மனதிற்கு நிம்மதியான உறக்கத்தை அளித்து, மன அழுத்தத்திலிருந்து உங்கள் மனதை விடுவிக்கிறது. இது ஒரு பிரபலமான மூலிகை தேநீர் ஆகும், இதில் அபிஜெனின் என்ற ஆன்டிஆக்ஸிடன்ட் உள்ளது. இது மூளையில் தூக்கத்தை ஊக்குவிக்கும் தன்மையை தூண்டி நிம்மதியான தூக்கத்தை கொடுக்கிறது.

3 /7

உங்கள் நரம்புகள், மனம், உடல் மற்றும் ஆன்மாவை தளர்த்துவதற்கு யோகா அறியப்படுகிறது. தூக்கமின்மைக்கு முக்கியமாகப் பங்களிக்கும் மன அழுத்தத்தை, 10 நிமிடங்களில் தூங்குவதற்கு இரவில் நீங்கள் செய்யக்கூடிய எளிதான யோகா ஆசனங்கள் மூலம் குறைக்கலாம். இரவில் நன்றாக தூங்கவும் பாலாசனம், சவாசனம், சேது பந்தாசனம், சுப்த பத்த கோனாசனம் ஆகியவற்றை முயற்சி செய்யலாம். 

4 /7

ஒரு நல்ல இரவு தூக்கம் நீங்கள் எங்கு தூங்குகிறீர்கள் என்பதைப் பொறுத்தது. உங்கள் உடலும் மனமும் நிம்மதியாக உணர இருண்ட, சத்தம் இல்லாத அறை தேவை. உங்கள் படுக்கையறை இருட்டாகவும், அமைதியாகவும், குளிர்ச்சியாகவும் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இருள் தூக்கத்தை ஊக்குவிக்கும் மெலடோனின் என்ற ஹார்மோனின் வெளியீட்டைத் தூண்டுகிறது. ஒளியைத் தடுக்க திரைச்சீலைகள் அல்லது கண் முகமூடியைப் பயன்படுத்தவும்.   

5 /7

வெறும் 10 நிமிடங்களில் தூங்க தூக்கத்தை வரவழைக்கு மெல்லிய இசையை இசைக்கவும், ஒலியளவைக் குறைவாக வைத்திருக்கவும். இதை ஒரு தாலாட்டுப் பாடலாக தேர்ந்தெடுத்து, உங்கள் மனதை நிம்மதியாக உணர உதவுங்கள். 10 நிமிடங்களில் உங்களின் சிறந்த தூக்கத்தை அனுபவிப்பீர்கள். 

6 /7

நல்ல சிலிக்கானில் செய்யப்பட்ட ஒரு ஸ்லீப்பிங் ஐ மாஸ்க், கண்களுக்கு குளிர்ச்சியை கொடுத்து தூக்கத்தை கொடுக்கும். இது உங்கள் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்துவதோடு, சூழலில் உங்கள் மனதையும் நிம்மதியாக உணர வைக்கும். முகமூடி எந்த வகையான ஒளி அல்லது ஒலியினால் உங்களைத் திசைதிருப்பாமல் தடுக்கும். இதனுடன், உங்கள் தலையணைகள் மற்றும் மணிக்கட்டில் சில கெமோமில் ஆயில் அல்லது லாவண்டர் ஆயில் ஸ்ப்ரே செய்யலாம்.  

7 /7

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.