Savings For Boy Child : சுகன்யா சம்ரிதி என்ற செல்வமகள் சேமிப்புத் திட்டம், பெண் குழந்தைகளுக்கு சிறந்த திட்டம் என்பது அனைவருக்கும் தெரியும். அப்படி என்றால், ஆண் குழந்தைகளுக்கான சிறப்பான சேமிப்பு திட்டம் என்ன என்ற கேள்வி எழுவது இயல்பு...
2015இல் கொண்டு வரப்பட்ட சுகன்யா சம்ரிதி திட்டத்திற்கு இணையான திட்டம் எதுவும் ஆண் குழந்தைகளுக்கு இல்லை என்றாலும், ஆண் குழந்தைகளுக்காக சேமிக்க விரும்பும் பெற்றோர்களுக்கு சிறந்த தேர்வாக இருப்பது மைனர் குழந்தைகளுக்கான பிபிஎஃப் மூலம் சேமிப்பது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இதைப் பற்றி விரிவாக தெரிந்துக் கொள்வோம்
பெற்றோர், தாங்கள் சம்பாதிக்கும் பணத்தை சேமிப்பதற்கான காரணங்கள் பலவாக இருந்தாலும், குழந்தைகளின் கல்விக்காக, குழந்தைகளின் எதிர்காலத்திற்காக சேமிப்பது முக்கியமானதாக இருக்கிறது.
பெண் குழந்தைகளை தன்னிறைவு கொண்டவர்களாக மாற்ற வேண்டும் என்ற இலட்சியத்துடன் 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட திட்டம் செல்வ மகள் சேமிப்புத் திட்டம். பெண் குழந்தைகள் மேம்பாட்டுக்கான சேமிப்பு திட்டத்திற்கு சமமாக ஆண் குழந்தைகளுக்கான சேமிப்பு திட்டம் என்ன என்பது பலருக்கும் உள்ள கேள்வி...
வழக்கமாக பிபிஎஃப் எனப்படும் பொது வைப்பு நிதித் திட்டத்தின் கீழ் 18 வயதுக்கு குறைவான சிறார்களுக்கான திட்டத்தின் கீழ் ஆண் குழந்தைகளுக்காக சேமிக்கலாம்.
இந்தத் திட்டத்தில் ஒவ்வொரு நிதியாண்டிலும் ரூ.500 முதல் அதிகபட்சம் ரூ.1,50,000 வரை சேமிக்கலாம். 7.1% வட்டி வழங்கப்படுகிறது. வட்டி விகிதம் 3 மாதங்களுக்கு ஒரு முறை மாற்றியமைக்கப்படும். ஆனால், செல்வமகள் சேமிப்புத் திட்டத்தின் வட்டி விகிதம் 8.2% என்பது குறிப்பிடத்தக்கது
15 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.1,000 செலுத்தினால், மொத்தம் நாம் செலுத்தியது ரூ.1,80,000 என்றால், அதற்கு ரூ.1,35,578 வட்டியும் சேர்த்து ரூ.3,15,572 தொகை 15 ஆண்டுகளில் வளர்ந்திருக்கும்
உதாரணத்திற்காக மாதம் 1000 ரூபாய் என்று சொன்னாலும், எவ்வளவு பணம் செலுத்தினால், எவ்வளவு முதிர்வுத் தொகை எவ்வளவு கிடைக்கும் என்பதை கால்குலேட்டர் போஸ்ட் இன்ஃபோ என்ற ஆப் மூலம் சுலபமாக தெரிந்து கொள்ளலாம்.
பிபிஎஃப் மூலம் சேமிக்க ஆன்லைனில் கணக்கைத் தொடங்கலாம் அல்லது தபால் நிலையத்திற்கு நேராகவும் சென்று கணக்கைத் தொடங்கலாம். இன்டர்நெட் பேங்கிங் அல்லது இந்தியா போஸ்ட் பேமென்ட் பேங்க் ஆப் மூலமும் ஆன்லைனில் பணம் செலுத்தி சேமிக்கலாம்
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யார் வேண்டுமானாலும் இந்தத் திட்டத்தில் சேரலாம். பொருளாதாரத்தில் எந்த நிலையில் இருந்தாலும் இந்தத் திட்டம் மூலம் சேரலாம்