How To Dress Up For An Interview : நேர்காணலுக்கு செல்லும் போது எப்படி ஆடை உடுத்தி சென்றால் வேலை கிடைக்கும்? இதோ அதற்கான டிப்ஸ்!
How To Dress Up For An Interview : ஆள் பாதி ஆடை பாதி என்று கூறுவர். இதை ஏற்க பலர் மறுத்தாலும், நாம் உடுத்தும் உடைகளை வைத்து பிறர் நம்மை எடை போடுவர் என்பதும் உண்மைதான். நேர்காணலில் மட்டுமல்ல, எங்கிருந்தாலும் நம்மை சிலர் கண்களாலேயே எடை போடுவர். அதனால், எந்த வகையான ஆடை அணிகிறோம் என்பதில் நாம் கவனம் கொள்ள வேண்டும். எனவே, நேர்காணலுக்கு எப்படி ஆடை அணிய வேண்டும் என இங்கு பார்ப்போம்.
ஷர்ட் மற்றும் ஸ்கர்ட் அணிந்து நேர்காணலுக்கு செல்லலாம். இது, தொழிலதிபர்கள் மற்றும் பெரிய நிறுவனங்களில் வேலை செய்பவர்களால் அடிக்கடி உடுத்தப்படும் ஆடை ஆகும். கீழே அணியும் ஸ்கர்ட் மட்டும் நேவி ப்ளூ அல்லது கருப்பு நிறத்தில் இருப்பது சிறப்பு. அதுவும், முட்டிக்கு கீழ் இருப்பதாக இருக்க வேண்டும்.
நேர்காணலுக்கு போகும் போது கண்டிப்பாக கட் ஷூ அணிந்து செல்லுங்கள். லேஸ் வைத்த ஷூஅ அணிவதை தவிர்க்கவும்.
மேலே வெள்ளை நிற ஷர்ட் கீழே கருப்பு நிற பேண்ட் அணிந்து செல்லலாம். இதை இன் செய்து கொண்டு செல்வதும், அப்படியே செல்வதும் உங்களது விருப்பம்தான்.
இந்திய பெண்களால் அதிகம் உடுத்தப்படும் ஒரு ஆடை, சுடிதார் எனப்படும் குர்தா. கழுத்தை முழுமையாக கவரும் வகையில், காலர் வைத்து குர்த்தா அணிந்து செல்லலாம்.
ஜீன் பேண்ட் அணிந்து செல்கிறீர்கள் என்றால், அது டார்க் நிறத்தை சேர்ந்ததாக இருக்க வேண்டும். கருப்பு அல்லது டார்க் ப்ளூ நிறமாக அது இருக்கலாம்.
கார்டிகன்: ஸ்வெட்டர் போன்ற வடிவில் இருக்கும் இந்த கார்டிகன் ஆடையை உங்கள் சட்டைக்கு மேல் கோட்டாக உபயோகிக்கலாம்.
பட்டன் டவுன்: ஷர்ட் அணிகையில், பட்டன் டவுன் ஆடைகளை அணியவும். இது, உங்களுக்கு நல்ல பிசினஸ் லுக்கை கொடுக்கும்.
நேர்காணலுக்கு செல்கையில், உங்கள் உடலை அதிகமாக காண்பிக்கும் ஆடைகளை தவிர்த்து விடுங்கள். அதே போல torned jeans மற்றும் அடிக்கும் கலர் கொண்ட ஆடைகளை அணிவதையும் தவிர்க்கவும். இதைவிட மிகவும் முக்கியமானது நேர்காணலில் கேட்கும் கேள்விகளுக்கு சரியாக பதில் கூறுவதுதான். அதை சரியாக செய்தால் கண்டிப்பாக வேலை கிடைக்கும்.