ஆதார் கார்ட், டிரைவிங் லைசன்ஸை வாட்ஸ் அப்பில் சேமிப்பது எப்படி?

பான் கார்டு, ஓட்டுநர் உரிமம், சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், ஆர்சி புத்தகம், 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், ஆயுள் காப்பீட்டு சான்றிதழ் போன்ற முக்கியமான ஆவணங்களை டிஜிட்டல் முறையில் வாட்ஸ் அப்பில் சேமித்து வைத்துக்கொள்ளலாம்.

 

1 /4

உங்கள் மொபைலில்  +91-9013151515 என்ற எண்ணை சேமித்து வைத்து 'DigiLocker' என்று டைப் செய்து மெசேஜ் அனுப்ப வேண்டும்.  

2 /4

இப்போது உங்கள் டிஜிலாக்கர் கணக்கை உருவாக்கி அங்கீகரிப்பதற்கும், பான் கார்டு, ஓட்டுநர் உரிமம், சிபிஎஸ்இ மதிப்பெண் சான்றிதழ்கள், ஆர்சி போன்ற ஆவணங்களைப் டவுன்லோடு செய்வதற்கான ஆப்ஷன் உங்களுக்கு வழங்கப்படும் .  

3 /4

டிஜிலாக்கர் செயலி மற்றும் இணையதளம் செயல்படுவதை போலவே, இதில் சரிபார்ப்பிற்காக உங்கள் ஆதார் எண்ணைச் சேர்க்கும்படி கேட்கப்படும்.  

4 /4

ஆதார் எண்ணை உள்ளிட்டதும், ஓடிபி உதவியுடன் சாட்பாட் அதை சரிபார்க்கும்.  இப்போது உங்களது அனைத்து ஆவணங்களும் வாட்ஸ்அப்பில் டவுன்லோடு செய்யப்படும்.