Mukesh Ambani Success Tips : இந்தியாவின் டாப் பணக்காரராக இருப்பவர், முகேஷ் அம்பானி. இவரைப்போல நீங்களும் பணக்காரர் ஆகலாம், சில டிப்ஸை மட்டும் ஃபாலோ செய்தால் போதும்.
Mukesh Ambani Success Tips : இந்தியாவின், டாப் 10 பணக்காரர்களில் முதல் இடத்தில் இருப்பவர் முகேஷ் அம்பானி. சமீபத்தில் தனது மகனின் திருமணத்திற்கு முந்தையை நிகழ்ச்சியை நடத்தினார். இதற்கு மட்டும் ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட்டில் இருந்து பல திரை பிரபலங்கள் வருகை தந்திருந்தனர். மிக பிரம்மாண்டமான அளவில் நடைப்பெற்ற இந்த நிகழ்ச்சியை நடத்த சுமார் 1000 கோடிக்கு மேல் செலவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இவரை போல பணக்காரர் ஆக வேண்டும் என்று பலர் கனவு கண்டு கொண்டிருக்கின்றனர். அதற்கு உதவும் சில டிப்ஸை இங்கு பார்க்கலாம்.
உலகின் மிக முக்கிய பணக்காரர்களுள் ஒருவராக இருப்பவர், முகேஷ் அம்பானி. சில நாட்களுக்கு முன்பு ஃபோர்ப்ஸ் நாளிதழ் வெளியிட்ட உலக பணக்காரர்களின் தரவரிசை பட்டியலில் 9வது இடத்தில் இருந்தார்.
முகேஷ் அம்பானி பரம்பரை பணக்காரர் என்றாலும் தங்களின் சொத்துகளை இன்னும் பன்மடங்காக உயர்த்தியிருக்கிறார். இதற்காக இவர் செய்யும் விஷயங்கள் என்ன? இவரை போல பணக்காரர் ஆகவும் வெற்றியாளராகவும் மாற என்ன செய்ய வேண்டும்? இதோ அதற்கான டிப்ஸ்.
Experience and Hardwork: முகேஷ் அம்பானி, எம்.பி.ஏ படித்து முடித்தவுடன் தங்களின் குடும்ப நிறுவனங்களுக்கு சென்று அங்கு எப்படி தொழில் செய்வது என்று கற்றுக்கொள்ள ஆரம்பித்தார். தொழிலதிபர்களின் குடும்பத்தில் இருந்து வந்திருந்தாலும், தனது சொந்த முயற்சியாலும், கடின உழைப்பாலும் சில முன்னெடுப்புகளை ஏற்படுத்தினார். இதனால் தொழிலிலும் சிறந்து விளங்கினார். எனவே, உங்கள் அனுபவத்தில் இருந்தும் கடின உழைப்பில் இருந்தும் நல்ல பாடங்களை கற்றுக்கொள்ளுங்கள்.
Positive Mindset : முகேஷ் அம்பானி, ஒரு முறை தான் கொடுத்திருந்த நேர்காணலில் அவரது வெற்றிக்கான சிக்ரெட்டை கூறினார். அது என்னவென்றால், நமது வெற்றி இதுதான் என குறிப்பிட்ட இலக்கை நிர்ணயித்தால் அதற்குள்ளேயே சுருங்கி விடுவோமாம். எனவே, நமது வெற்றி எப்போதும் குறுகியதாக இருக்க கூடாது என்று கூறியிருக்கிறார். மேலும், எப்போதும் பாசிடிவாக நினைக்க வேண்டும் என்றும், அப்போது நம்மை சுற்றி நல்ல விஷயங்கள் நடக்கும் என்றும் கூறியிருக்கிறார்.
Respect For Employees : சிறந்த தொழில் அதிபராக வருவதற்கு, தன்னிடம் வேலை செய்யும் ஊழியர்களை மரியாதையாக நடத்த வேண்டும் என்றும், அவர்களுக்கு தகுந்த மதிப்பு கொடுக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். இதனால், தொழில் பன்மடங்காக பெருகுவதோடு மரியாதையுடன் நடத்துபவரிடமே பலர் வேலை செய்ய விரும்புவர் என்றும் கூறினார்.
Social Responsibilities: முகேஷ் அம்பானி, சமூக நலனிலும் அக்கறை கொண்டவர். தனது மகனின் திருமண நிகழ்ச்சியில் கூட ஒரு கிராமத்திற்கே உணவளித்தார். எனவே, வாழ்வின் எந்த இடத்திற்கு சென்றாலும் அனைவருக்குள்ளும் சமூக அக்கறை இருக்க வேண்டும் என்று கூறுகிறார்.
Never Give Up-Aim High: முகேஷ் அம்பானி, வாழ்வில் எத்தனை முறை தோல்வி வந்தாலும் அதை கண்டு துவண்டு போகாதவறாக இருக்கிறார். அது மட்டுமன்றி, வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் எப்போதும் பெரிய இலக்குடன் இருக்க வேண்டும் என்றும் கூறுகிறார். விடாமுயற்சியுடன் நமக்கு வேண்டியதை தேடி ஓடினால், அது நம்மை தேடி வரும் என்பதை நம்புபவர்களுள், முகேஷ் அம்பானியும் ஒருவர். நீங்கள் எப்படி?