How To Be Happy : மனிதராக பிறந்த அனைவருமே மகிழ்ச்சியாக இருப்பதில்லை. ஒரு சிலர், மகிழ்ச்சியாக இருக்க முயற்சி செய்கின்றனர். ஒரு சிலர், அந்த மகிழ்ச்சி எங்கே இருக்கிறது என தேடிக்கொண்டு இருக்கின்றனர். இந்த நிலையில், ஒரு மனிதர் எப்படி மகிழ்ச்சியானவராக மாற முடியும்? இதோ சில ஈசியான டிப்ஸை பார்க்கலாம்.
How To Be Happy : மகிழ்ச்சி என்பது, பொருளோ பணமோ கிடையாது. அது, மனம் சம்பந்தப்பட்ட விஷயமாகும். நம் வாழ்வில், சிலரை பார்க்கும் போது “எப்படி இவர் மட்டும் இவ்வளவு ஜாலியாக இருக்கிறார்?” என்று கேட்க தோன்றும். நாமும் அப்படி இருக்க வேண்டும் என்று தோன்றும். ஒருவர் மகிழ்ச்சியாக இருக்கிறார் என்றால், அவர் வாழ்வில் பிரச்சனைகளே இல்லாமல் இருக்கிறார் என்ற அர்த்தம் இல்லை. சொல்லப்போனால், அவர் வாழ்வில் நம்மை விட பல பிரச்சனைகள் இருக்கும். ஆனால், அதையும் சரியான முறையில் கையாண்டு சரியான பாதையில் செல்பவர்களால்தான் மகிழ்ச்சியை கையாள முடியும். அதற்கான சிறப்பான 7 வழிகளை இங்கு பார்க்கலாம்.
யாருக்குதான் மகிழ்ச்சியாக இருக்க பிடிக்காது? மன அமைதி இருந்தால், அதன் கூடவே மகிழ்ச்சியும் வந்து விடும் என்று கூறுவர். அப்படி, மன மகிழ்ச்சியை உருவாக்க, நாம் சில விஷயங்களை செய்ய வேண்டியிருக்கிறது. அவை என்னென்ன தெரியுமா?
நம் மனதின் கற்பனையும், நிஜ உலகமும் வேறு மாதிரியாக இருக்கும். எனவே, எப்போதும் உங்களது எதிர்பார்ப்புகளை இமாலய அளவிற்கு வைத்துக்கொள்ளாமல், குறைவாக வைத்துக்கொள்ளவும்.
உங்கள் வாழ்வில், நீங்கள் முன்னுரிமை கொடுக்க வேண்டிய நபர் யார் தெரியுமா? நீங்கள்தான்! அன்புக்குரியவர்களின் பேச்சை கேட்க வேண்டும் என்றாலும், உங்கள் மனதிற்கு நீங்கள் உண்மையானவராக இருக்க வேண்டும்.
நீங்கள், இப்போதைக்கு இருக்கும் நிலையில் இருந்து மகிழ்ச்சியாக இல்லை என்றால் அதிலிருந்து உங்களை முன்னேற்றிக்கொள்ள முயற்சி செய்ய வேண்டும். உங்களது மகிழ்ச்சியான நிலையை அடைய முன்னேற்ற பாதையை வழியாக தேர்ந்தெடுங்கள்
உங்களிடம் இருக்கும் நற்பண்புகளை, உங்கள் கனவுகளை, உங்களிடம் உங்களுக்கே பிடித்த விஷயங்களை நீங்களே உங்களுக்குள் பாராட்ட கற்றுக்கொள்ளுங்கள். இதனால், உங்கள் தன்னம்பிக்கை உயரும்.
பலர், தங்களின் பெரும்பான்மையான வாழ்வு காலத்தை பிறருக்கு என்ன பிடிக்கும் என யோசித்து யோசித்தே கழித்து விடுகின்றனர். எது குறித்து முடிவெடுப்பதற்கு முன்பும், அந்த விஷயம் உங்களுக்கு தேவையானதா இல்லையா என்பது முடிவு எடுங்கள். இது, உங்களை மகிழ்ச்சியான மனிதராக மாற உதவும்.
நாம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றால், நம்மை சுற்றி இருப்பவர்களும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அவர்களை சந்தோஷப்படுத்துவது நமது கடமை இல்லை என்றாலும், நம்மால் அவர்கள் கஷ்டப்படாமல் இருக்க வேண்டும்.
நாம், வேறு ஒருவராக மாறி அல்லது இதைவிட இன்னும் முன்னேறிய பிறகுதான் மகிழ்ச்சியாக இருக்க நம் மனதை அனுமதிக்க வேண்டும் என்றெல்லாம் கிடையாது. எனவே, இப்போது இந்த நொடியில் நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ, அப்படியே மகிழ்ச்சியாக இருந்து பழகுங்கள்.