ஆசைகள் அனைத்தும் நிறைவேறும்... 2024ம் ஆண்டின் அதிர்ஷ்ட ராசிகள்!

புத்தாண்டு 2024  தொடங்க சில மாதங்களே உள்ள நிலையில், 2024-ம் ஆண்டு எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமான வருடமாக இருக்கப் போகிறது என்பதை தெரிந்து கொள்வோம்.

ஜோதிட கணிப்புகளின் படி, 2024ம் ஆண்டில் வேலை, தொழில், வியாபாரம், காதல் வாழ்க்கை மற்றும் குடும்பம் போன்ற அனைத்திலும் அதிர்ஷ்டத்தை அள்ளும் 5 அதிர்ஷ்ட ராசிகள் எவை என தெரிந்து கொள்வோம்.

1 /7

புத்தாண்டு 2024 ராசி பலன்: ஜோதிட கணிப்புகளின் படி, 2024ம் ஆண்டில் வேலை, தொழில், வியாபாரம், காதல் வாழ்க்கை மற்றும் குடும்பம் போன்ற அனைத்திலும் அதிர்ஷ்டத்தை அள்ளும் 5 அதிர்ஷ்ட ராசிகள் எவை என தெரிந்து கொள்வோம்.

2 /7

மேஷம்: புத்தாண்டு 2024 சில புதிய ஆச்சரியங்களைக் கொண்டு வரும். உங்கள் ஆசை அனைத்தும் நிறைவேறும். புதிய வேலை கிடைக்க வாய்ப்புகள் உள்ளன.  2024 ஆம் ஆண்டில் ஒரு புதிய நபர் உங்கள் வாழ்க்கையில் நுழையலாம். உத்தியோகத்தில் ஒத்துழைப்பான சூழல் உண்டாகும். மனதளவில் புதிய தெளிவு ஏற்படும். குடும்பத்தில் சுபிட்சம் இருக்கும். பணத் தட்டுபாடு என்பதே இருக்காது

3 /7

கும்பம்: 2024-ம் ஆண்டு மகிழ்ச்சியையும் வெற்றியையும் அள்ளித்தரும் ஆண்டாக இருக்கும். கடின உழைப்பு நிறைந்ததாக இருக்கும். குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உயர் அதிகாரிகளைப் பற்றிய புரிதல் மேம்படும். புதுமையான சிந்தனைகள் உண்டாகும். அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பினால், வெற்றியின் உச்சத்தைத் தொடுவதில் வெற்றி பெறுவீர்கள். உங்கள் புதிய வீட்டிற்கு மாறலாம் அல்லது புதிய வீடு அல்லது நிலம் வாங்கலாம்.

4 /7

2024 ஆம் ஆண்டு உங்களுக்கு அதிர்ஷ்டமானதாக இருக்கும். பணியிடத்தில் அங்கீகாரத்தையும் பாராட்டையும் பெறலாம். சுற்றி இருப்பவர்களிடையே நீங்கள் மிகவும் பிரபலமாகலாம். மனதளவில் ஒருவிதமான திருப்தி ஏற்படும். வெளியூர் சென்று படிக்க விரும்பும் மாணவர்களின் விருப்பம் நிறைவேறும். 2024 ஆம் ஆண்டு உங்கள் வாழ்க்கையில் புதிய திருப்பங்களைக் கொண்டுவரும். 

5 /7

விருச்சிகம்: 2024ம் வருடம் உங்கள் தொழிலுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். எந்த ஒரு புதிய முயற்சியையும் தொழிலில்  முயற்சிக்கலாம். 2024 ஆம் ஆண்டில், காதல் மற்றும் வாழ்க்கையில் நீங்கள் விரும்பும் நபரை மணக்கலாம். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வருமான நிலையில் திருப்தி உண்டாகும். வீட்டின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். பணத்திற்கும் மகிழ்ச்சிக்கும் குறைவே இருக்காது.

6 /7

மகரம்: 2024 ஆம் ஆண்டில் புதிய வேலை கிடைத்து மகிழ்ச்சி அடைவீர்கள். முயற்சிக்கு உண்டான மதிப்பு கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். இந்த வருடம் கண்டிப்பாக கொஞ்சம் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். உங்களின் கடின உழைப்பின் பலன் நிச்சயம் கிடைக்கும். திருமணம் கை கூடி வரும். குடும்பத்தில் அமைதியும் சந்தோஷமும் நிலைத்திருக்கும். 

7 /7

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.