அட்டகாசமாய் களமிறங்கவுள்ளன Hero, Honda-வின் மின்சார ஸ்கூட்டர்கள்

Electric Scooters: பெட்ரோல் விலை இந்தியாவில் பல இடங்களில் ரூ .100-ஐ தொட்டு விட்டது. இதன் காரணமாக ஸ்கூட்டரை ஓட்டுவதற்கும் நீங்கள் பல முறை சிந்திக்க வேண்டியுள்ளது. ஆகையால் இரு சக்கர வாகன நிறுவனங்கள் இப்போது தங்கள் கவனத்தை மின்சார இரு சக்கர வாகனங்கள் பக்கம் செலுத்தி வருகின்றன. பெட்ரோலுடன் ஒப்பிடும்போது இதில் செலவுகள் மிகக்குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. 

1 /5

சில நாட்களுக்கு முன்பு Hero MotoCorp மற்றும் Gogoro ஒரு கூட்டணியை அறிவித்தன. இதன் கீழ் அவர்கள் 2022 ஆம் நிதியாண்டின் நான்காவது காலாண்டில் தங்கள் முதல் மின்சார ஸ்கூட்டரை அறிமுகம் செய்ய உள்ளனர். ஊடக அறிக்கையின்படி, இந்த மின்சார ஸ்கூட்டருக்கு Viva என்று பெயரிடப்படக்கூடும்.

2 /5

தைவானை தளமாகக் கொண்ட கோகோரோ, பேட்டரி மாற்றம் மற்றும் ஸ்மார்ட் இயக்கத்திற்கான தீர்வுகளை வழங்கும் நிறுவனமாகும். ஹீரோ அதிக மின்சார இரு சக்கர வாகனங்களை உருவாக்கும், கோகோரோ அவற்றுக்கான பேட்டரி மாற்றும் வலையமைப்பை அமைக்கும். இதன் மூலம், வாடிக்கையாளர்களுக்கு கோகோரோ நெட்வொர்க்கிலிருந்து பேட்டரிகளை மாற்றுவதற்கான தளம் கிடைக்கும்.

3 /5

கோகோரோ ஏற்கனவே விவா என்ற பெயருக்கான வர்த்தக முத்திரையை பெற்றுள்ளதாகவும், இந்தியாவுக்கான காப்புரிமையையும் பெற்றுள்ளதாகவும் ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. Gogoro Viva இருக்கைக்கு அடியில் ஒரு பேட்டரி பேக் உடன் வரும். இந்த பேட்டரி டிஸ்சார்ஜ் ஆனவுடன் உடனடியாக மற்றொரு பேட்டரியை மாற்றிவிடலாம். இதன் ரேஞ்ச் 85 கி.மீ. இருக்கும் என கூறப்படுகின்றது.

4 /5

Hero Motocorp-ஐ தவிர, ஜப்பானிய கார் நிறுவனமான ஹோண்டாவும் (Honda) விரைவில் ஒரு மின்சார ஸ்கூட்டரை அறிமுகம் செய்யவுள்ளது.  இந்திய சாலைகளில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பென்லி-இ சோதனை செய்வதையும் காண முடிந்தது. 2019 ஆம் ஆண்டில், ஹோண்டா தனது பென்லி இ எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தொடரை முதல் முறையாக அறிமுகப்படுத்தியது. இப்போது இந்த ஸ்கூட்டரை இந்திய தானியங்கி ஆராய்ச்சி சங்கம் (ARAI) சோதனை செய்துள்ளது. எனவே, அதன் அறிமுகம் விரைவில் செய்யப்படலாம் என்ற ஊகங்கள் உள்ளன. எனினும், இது குறித்து அதிகாரப்பூர்வமாக எதுவும் கூறப்படவில்லை.

5 /5

இரண்டு வெவ்வேறு மோட்டார் விருப்பங்களுடன் ஹோண்டா அதை வழங்குகிறது. Benly-E I மற்றும் I Pro-வில் நிறுவனம் 2.8kW திறன்கொண்ட எலக்ட்ரிக் மோட்டர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது 13 Nm டார்க்கை உருவாக்குகிறது. இந்த ஸ்கூட்டர் ஒரே சார்ஜில் மணிக்கு 30 கி.மீ வேகத்தில் இயக்கும்போது 87 கி.மீ வரையிலான வரம்பைக் கொடுக்கும் என்று நிறுவனம் கூறுகிறது. பென்லி இ II மற்றும் II ப்ரோவில், நிறுவனம் 4.2 கிலோவாட் மின்சார மோட்டாரைப் பயன்படுத்தியது. இது 15 என்எம் டார்க்கை உருவாக்குகிறது. இது 60 கி.மீ வேகத்தில் இயக்கும்போது 43 கி.மீ. வரையிலான ரேஞ்சை அளிக்கின்றது.